Saturday, September 20, 2008

திருமணம் பற்றி சில விஷயங்கள்

திருமணம் என்றால் இருமணம் ஒன்று சேர்ந்து செய்வது ஆகும்.திருமணம் என்றவுடன் அனைவருக்கும் நியாபகம் வருவது.தாங்கள் படும் கஷ்டங்கள்.திருமணத்தில் இரண்டு வகையாக உள்ளது.ஒன்று காதல் திருமணம் மற்றொன்று பெரியவர்களாக பார்த்து செய்வது.ஆனால் துன்பம் என்ரு வரும் போது இந்த இரண்டும் இளைச்சது கிடையாது.
திருமணத்தை பற்றி பெரிய பெரிய புலவர்கள் தங்கள் கருத்துகளை எழுதியுள்ளனர்.
பண்டைய கால திருமணங்கள் எல்லாம் ஒருவாரமாக சிறப்பாக இருக்கும் .ஆனால் இப்பொழுது கொஞ்சம் முன்னேறி ஒரு நாள் எடுத்துக்கொள்கின்றனர்..

"திருமணம் என்பது ஒரு சிறை.அதில் பெண் என்பவள் ஒரு கைதி ,ஆண் என்பவன் சிறை அதிகாரி " என்று பகவன் என்ற பெரியவர் கூறியுள்ளார்.
இவர் சொன்னகருத்தை முழுமையாக ஏற்று கொள்ளமுடியாவிட்டாலும் சில உண்மைகள் உள்ளன.
திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சியக்கப்படுகிறது,என்று கூறுவர்.அது உண்மையா என்று கேட்டால் பல பேரின் கருத்து,இல்லை என்றே இருக்கும்.திருமணம் என்பது அந்த ஒரு நாள் குடும்பத்தினரோடு இருந்து மகிழ்ச்சியாக இருப்பது.ஆனால் அதன் பிறகு வருவது கஷ்டங்களே!
பெரியவர்களால் முடிவு செய்யப்பட்டு செய்வதுதான் பிரச்சனை என்று நினைத்து.தன் வாழ்க்கையை தானே தேடும் பலருக்கு பல கஷ்டங்கள்.காதல் திருமணம் செய்து ஒருவரையொருவர் நன்றாக புரிந்துகொண்டு வாழ்ந்தார்களா என்றால் அவர்கள் தான் முதலில் விவாகரத்துக்கு முன்வருகின்றனர்.
விளையாட்டு நிகழ்ச்சியாக போய்விட்டது இந்த திருமணம்.தங்களது வாழ்க்கையை ஒரு விளையாட்டாக நினைக்கின்றனர்.
அதுபோல் இப்பொழுது நம் நாட்டிலும் திருமணம் ஒரு விளையாட்டு பொருளாக போய்விட்டது.
ஆண்கள் பெண்கள் தங்கள் வாழ்க்கையை ஆரம்பிப்பதற்கு திருமணம் ஒரு வேலியாக பயன்படுத்துவர்.ஆனால் இப்பொழுது நிறைய வழிகள் இருக்கிறது.எடுத்துக்காட்டாக "லிவிங் டூகெதர்"என்ற பெயரைக்கொண்டு வாழ்கின்றனர்.ஆதலால் திருமணம் இரண்டாம் பட்சமாக கருதப்படுகிறது.இப்படி வாழ்ந்து பிடித்தால் திருமணம் செய்து கொள்வர்.இல்லையென்றால் "பி பிரண்ட்ஸ்" என்று சொல்லிவிட்டு செல்வர்.
காதல் திருமணத்தை பொருத்தவரை காதலிக்கும் பொழுது நந்தவனமாக தெரிகிறது.ஆனால் திருமணம் போது ,அதன் பிறகு பலருக்கு போர்களமாகவும்,நரகமாகவும் இருக்கிறது.ஏன் செய்து கொண்டோம் என்ற நினைக்கிற அளவுக்கு போய்விடுகிறது.இதற்கு காரணம் புரிந்துகொள்ளமுடியாத தன்மை,அனைவருக்கும் அவரவர்களுக்கு ஏற்றவாறு துணை அமைந்ததா என்றால் முழுமையாக இல்லை .
திருமணம் எனப்து எதற்காக ஒரு மனிதனின் வாழ்க்கையில் எவ்வளவு முக்கியமென்றால்,ஒரு மனிதன் தன் இளமை இழந்து,இன்பங்களையும் பல நினைவ்வுகளையும் மறந்து,முதுமையில் தனிமை வாட்டும் பொழுது,ஆதரவாய் பார்க்க ஒரு துணைவி -அதற்கு திருமணம் என்பது அவசியம்.
பல ஜாதங்களை வைத்து பஜ்ஜி சொஜ்ஜி ,கெட்டிமேலம் கொட்டி செய்வது மட்டும் திருமணம் கிடையாது.தன்னை நம்பி வருபவளை நல்லபடியாக வைத்து கொள்வதும்,ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாடுடன் வாழ்வதற்க்கும் திருமணம் உள்ளது.ஆனால் இதை எத்தனை பேர் ஒழுங்காக பின்பற்றுகிறார்கள்.
இருவரிடம் நடுவே நம்பிக்கை என்பது சற்று குறைந்தே காணப்படுகிறது.துரோகங்கள் தலைதூக்கியுள்ளன."ஈகோ" பிரச்சனை சொல்லவேவேண்டாம்.அந்த காலத்தில் ஒருத்தர் சம்பாத்தியத்தில் வாழ்ந்து வந்தனர்.ஆனால் இப்பொழுது கல்வி அதிகமாக கற்றதை வீணாக்கமல் வேலை செய்து கொள்வது,அந்த வேலையால் தினமும் ஒரு பிரச்சனை.நீ பெரியவனா,இல்லை நானா? என்ற பிரச்சனை ஒவ்வொரு வீட்டிலும் நடக்கிறது(இரண்டு பேர் சம்பாதிக்கும் வீட்டில்)மண உணர்வுகளை வைத்து திருமணம் செய்வது போய் அந்தஸ்து வைத்து செய்வது அதிகமாகி விட்டது.அதனால் என்னவோ விவகாரத்துக்கள் அதிகமாகிவிட்டது????

திருமணத்தின் போது ஒரு பெண்ணின் கழுத்திலோ காதிலோ கையிலோ தாலியோ ,மெட்டியோ,மோதிரமோ ஏதாவது அணிவார்கள்.ஒருவர் திருமணமானவரா இல்லையா என்பது இதில் எதையாவது வைத்து தெரியும்.யாரும் தன்னை தவறான கண்ணோட்டத்தோடு பார்ப்பதை தவிர்கிறதற்கு வெளியில் தெரியும்வாறு அணிவார்கள் .
ஆனால் இப்பொழுது கண்டுபிடிப்பது கடினமாகிவிட்டது.
நம் சமுதாயத்தில் பல பெண்கள் திருமணம் என்பதை விரும்பாமல் தனியாக வாழ்பவர்கள் உண்டு.நான் முன்பு சொன்னமாதிரி ஒரு சிறையில் வாழ்வதற்கு பல பெண்கள் முன்வருவதில்லை.ஆனும் பெண்ணும் திருமணத்திற்கு பிறகும் நட்பை வளர்த்துகொண்டால் திருமணத்தை ஏன் சிறை என்று சொல்லபோகிறோம்!..
ஒருபெண்ணுக்கு ஆண் என்பவன் தன் வாழ்க்கையில் மிகவும் முக்கியம்,அதுபோல்தான் ஆணுக்கும்.அதற்குதான் திருமணம் என்பது .இருவரும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டுவாழ்ந்தால் திருமணம் எப்பொழுதும் நந்தவனமாகவே இருக்கும்.
இருமணம் கொண்டு இணைவது திருமணம் இல்லையென்றால் வெறுமணமாகும்.

7 comments:

துளசி கோபால் said...

எழுத்துப்பிழைகள் அதிகமா இருக்கே..... கொஞ்சம் சரி பாருங்க.

அழகான ராட்சசி said...

//எழுத்துப்பிழைகள் அதிகமா இருக்கே..... கொஞ்சம் சரி பாருங்க.//


உள்ளிருக்கும் கருத்துக்களை பற்றி சொல்லாமல் எழுத்து பிழைகளை சொல்கிறீர்கள்.இருந்தாலும் சொன்னதற்கு நன்றி

Blogger said...

//ஒருபெண்ணுக்கு ஆண் என்பவன் தன் வாழ்க்கையில் மிகவும் முக்கியம்,அதுபோல்தான் ஆணுக்கும்.

ஆனால் அது துணைவனோ துணைவியோ ஆக இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை...

திருமணங்கள் தேவையா என்று நான் எழுதிய கட்டுரை இதோ..

http://pudhiyayugam.blogspot.com/2008/09/blog-post_19.html

முடிந்தால் அதை படித்துப் பாருங்கள்...

இதில் எத்தனை பேர் எழுத்துப்பிழை கண்டுபிடிக்கிறார்களோ தெரியவில்லை...:-)

வனம் said...

வணக்கம் செல்லம்மா

\\திருமணம் எனப்து எதற்காக ஒரு மனிதனின் வாழ்க்கையில் எவ்வளவு முக்கியமென்றால்,ஒரு மனிதன் தன் இளமை இழந்து,இன்பங்களையும் பல நினைவ்வுகளையும் மறந்து,முதுமையில் தனிமை வாட்டும் பொழுது,ஆதரவாய் பார்க்க ஒரு துணைவி -அதற்கு திருமணம் என்பது அவசியம்.\\

மேற்கண்ட வாசகம் ஆணுக்கு சரி அப்போது பெண்ணுக்கு?

ஏன்எனில் என்னிடம் அதிகமாக கூறப்பட்ட வார்த்தைகள் இவை

நன்றி

அழகான ராட்சசி said...

//மேற்கண்ட வாசகம் ஆணுக்கு சரி அப்போது பெண்ணுக்கு?//

நான் சொன்னது இருவருக்குமே!

அழகான ராட்சசி said...

//மேற்கண்ட வாசகம் ஆணுக்கு சரி அப்போது பெண்ணுக்கு?//

நான் சொன்னது இருவருக்குமே!

வனம் said...

வணக்கம் செல்லம்மா

||//மேற்கண்ட வாசகம் ஆணுக்கு சரி அப்போது பெண்ணுக்கு?//

நான் சொன்னது இருவருக்குமே!||

இருவருக்குமே எப்படி பொருந்தும்.
அப்படி என்றால் இருவரையும் சம வயதுடையவர்களாக அல்லவா இருக்கவேண்டும், பின் ஏன் ஆணைவிட பெண்னுக்கு வயது குறைவாக பார்கிறார்கள் (சில சமயம் 10, 15 வயது குறைவாக)

மேலும்

\\ஆதரவாய் பார்க்க ஒரு துணைவி\\
இந்த வாக்கியத்தில் எனக்கு சந்தேகம் உள்ளது

நன்றி