Monday, September 15, 2008

உறவுகள்

உறவுகள் என்பது மிகுந்த சிறப்புமிக்க ஒன்றாகும்.இதை எத்தனைபேர் மதிக்கிறார்கள்?என்றால் குறைவே!................நிறைய உறவுகள் ,அக்கா தங்கை,அண்ணன் தம்பி,கணவன் ,மனைவி,மாமியார் ,மாமனார்,மற்றும் சொல்லிக்கொண்டே போகலாம்.
உறவுக்கு மரியாதை என்பது இந்த நூற்றாண்டில் கிடையாது.உறவுகள் என்பது புனிதமானது.

உணர்வுகளின் மதிப்பை கொண்டே உறவுகள் மேம்படுகிறது.ஆனால் உணர்வுகளுக்கு மதிப்பிலாததால் உறவுகளுக்கும் மதிப்பில்லை.பணமே வாழ்க்கை என்ற நிலை வந்ததால் உறவுகள் விலகிகொண்டே செல்கிறது.
எத்தனை பேர் உறவுகளுக்கு மதிப்பை தருகிறார்கள் என்றால் சுலபமாக எண்ணிவிடலாம்.அவ்வளவு இடைவெளிகள்.இப்பொழுது கணவன் மனைவி உறவே சற்று தொலைவாகத்தான் உள்ளது.தான் கற்ற கல்வி வீணாகாமல் இருப்பதற்கு அமைந்த வேலைகளை வைத்து கணவன் ஒருபுறமும் மனைவி ஒருபுறமும் உள்ளனர்.
இதை இப்பொழுது உள்ளவர்களிடம் கேட்டால் உறவுகளை வைத்து என்னசெய்வது ,வாழ்க்கை நடத்துவதற்க்கு உறவுகள் வேண்டுமென்றாலும் பணம் என்பது மிகவும் முக்கியமானது ஆகும்.என்பதே பதில்.
இப்பொழுது உள்ள காலக்கட்டத்தில் உறவுகளில் சுயநலமே அதிகமாக உள்ளது.
இப்பொழுது உள்ள உறவுகளில் ஒன்றுமில்லை என்றே சொல்லலாம்.
பெற்றோர்களை எடுத்துக்கொண்டால் தங்கள் குழந்தைகள் நலனிற்காக எவ்வளவு தொலைவானாலும் அவர்களை கல்விக்காக அனுப்பிவைக்கிறார்கள்,இங்கே அவர்கள் தங்கள் குழந்தைகளிடம் பகிர்ந்து கொள்ளும் நேரங்களை இழந்தாலும் அவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இதையெல்லாம் விட்டுகொடுக்கிறார்கள்.

இப்படி சில காரணத்திர்காக உறவுகள் தொலைவில் இருப்பதை சொல்லலாம்.அடுத்தது உறவுகளில் உள்ள நம்பிக்கை.எத்தனை பேர் உறவுகளில் நம்பிக்கை வைத்துள்ளனர்.சொல்லமுடியாத ஒன்று,அவர்களை குற்றம் சொல்லமுடியாது,ஏனென்றால் நாடு போகும் நிலைமை அப்படி.சந்தேகம் நிறைந்த உறவாகவே உள்ளது.
தூரமாகிப்போகும் உறவுகள் சந்தேகப்படும் உறவுகள் இவைகளால் மனிதன் மேல் உள்ள மதிப்பை இழந்துவிடுகிறது.பணமோசடி போல் உறவு மோசடி நிறைய நடக்கிறது.
கலாச்சார கேடால் உறவுகள் சீரழிகிறது,துரொகங்கள் தலை தூக்குகின்றன.
அதைவிட கொடுமையான விஷயம் உறவை தவறான செயலுக்காக பயன்படுத்தும் சிலபேர்.அண்ணன் உறவுக்கும்,தங்கை உறவுக்கும்,அண்ணி உறவுக்கும் மற்றும் எத்தனையோ மதிக்கப்படும் உறவுக்கும் நடக்கும் கேடான விஷயங்கள் அனைவரும் அறிவோம்.இந்த நிலை மாறுவது எளிதானதா? இல்லை கடினமானதா என்பது என்னுடைய கேள்வி?
எந்த உறவுகள் மீதும் நம்பிக்கை வைக்கமுடியாமல் திண்டாடுகின்றனர்.
என்னைபொருத்தவரை உறவுகள் என்பது பசுதோல் போர்த்திய புலியாகவே தெரிகிறது.
மனிதர்கள் மனிதர்களாக மாறினால்தான் உறவுகள் உறவுகளாக தெரியும்.அப்பொழுதுதான் உறவுக்கு உண்டான மரியாதை பெருகும்,உறவை ஒரு சொல்லாக வைத்து செய்யும் அட்டூழியங்கள் அழியும்.
உணர்வோடு கூடிய உறவுகளை மேம்படுத்த அனைவரும் பாடுபடுவோம்.உறவை மதிப்போம்!..

2 comments:

Anonymous said...

நமக்கு நல்லது செய்றவங்க எல்லோரும் நம் உறவுகள் தான்

அழகான ராட்சசி said...

கெட்டது செய்றவங்களும் அவங்களே.பிரச்சனை உண்டாகுவது மூலக்காரணம் அவர்கள் தான்