Wednesday, September 17, 2008

சமூகமும் நட்பும்

சமூகம் என்றால் என்ன?நாம் தான் சமூகம்.நட்பு என்றால் என்ன ?நாம் தான் நட்பும்.சமூதயத்தில் நட்பு எந்த அளவுக்கு இடம்பெறுகிறது என்பதுதான் கேள்வி.அதற்கு பதில் நானே சொல்கிறேன்.உண்மையாக நட்பை இப்பொழுதுள்ள சூழ்நிலையில் அவ்வளவு பொறுப்பாக கருதுவதில்லை.நண்பர்கள் என்று சொல்கிறோம் .எத்தனை பேர் உண்மையான நட்போடு பழகுகிறார்கள்.நண்பன் என்றோ தோழி என்றோ நுழைய வேண்டியது.பிறகு அவர்களின் பழகத்தில் நட்பு தென்படாது ,காதல் என்ன்னும் சொல்லே தென்படும்.இதனால் உண்மையான நட்பை கூட சந்தேகபடவேண்டிய சூழ்நிலை.
இந்த சமுதாயத்தில் நட்பை எந்த அளவுக்கு கொச்சை படுத்துகிறார்கள்,என்பது கொஞ்சம் கவலையான விஷயம்.
அனைவரும் நண்பர்களாக இருப்போம் என்று சொல்லவேண்டியது ஆனால் அதை தொடர்வது கொஞ்சம் கஷ்டமாக தெறிகிறது.நான் எல்லா நட்பையும் சொல்லவில்லை.
எனக்கு தெரிந்த ஒரு பெண் நட்பு என்னும் பெயரை வைத்துக்கொண்டு செய்த அட்டூழியங்கள் ,சொல்கிறேன் கேளுங்கள்.
தான் செய்யும் தவறுகளுக்கு நட்பை ஒரு மையமாகவும் வழிகோலாகவும் அமைத்து மற்றவர் கண்ணுக்கு அதை நியாமாக நிருப்பித்தது.அவனுடன் ஊர் சுற்றுவது ,பிறகு பீச் செல்வது ,சினிமா செல்வது ,யாரவது கேட்டால் என்னுடைய நண்பன் என்று சொல்லவேண்டியது.நட்பிற்கும் ஒரு எல்லை உண்டு அல்லவா?அது யாராக இருந்தாலும் ,ஆணோ பெண்ணோ.?தொலைபேசியில் நெடுநேரம் பேசுவது,பெற்றோர்கள் கேட்டால் என் நண்பன் என்று சொல்வது,இது தப்பித்து செல்ல கூடிய ஒரு எளிதான வழியாகும்."குரூப் டிஸ்கஷன்" என்ற பெயரில் கும்மாளம் அடிப்பது,இப்படி நிரைய சொல்லிகொண்டே பொகலாம்.
ஒரு பெண் ஒரு ஆண் நட்பு வைத்துக் கொண்டால் அதை தொடர்ந்து செல்வது மிகவும் கடினம்.எப்படியும் மனம் தடுமாறுகிறது.இப்படிதான் எனக்கு தெரிந்த இன்னொரு தொழியின் கதை.அவள் நெடுநாளாக ஒரு ஆணுடன் பழகியது,நட்பாக இல்லாமல் போனது,இது அவர்களின் நண்பர்களுக்கு தெரிய அதை மறுத்து தூய நட்பே எங்களுடையது,என்று வாதடினாள்,ஆனால் அந்த ஆணோ நாங்கள் நண்பர்கள் கிடையாது எங்களுக்குள் வேறு ஒன்று உள்ளது,என்று கூறினான்.
இதில் நான் சொல்லவருவது அவர்களுக்குள் என்னமோ இருக்கட்டும்,அதை பற்றி நான் கவலைபடவில்லை,ஆனால் நட்பு என்பது உண்மையான ,தூய்மையான ஒரு தெய்வீகமான ஒன்று,காதல் இல்லாமல் இருந்துவிடலாம் ,ஆனால் நட்பு இல்லாமல் இருக்கமுடியாது.அதை ஏன் கொச்சைப்படுத்துகிறீர்கள்?
இங்கு சொல்லபடும் ஒரு கவிதை நட்புக்கும் காதலுக்கும் பொருந்தும்.
"பார்த்தவுடன் பழகாதே
பழகியவுடன் இணையாதே
இணைந்தவுடன் பிரியாதே
பிரிந்தவுடன் வ்ருந்தாதே"

இந்த சமுதாயத்தில் நட்பு சில நேரத்தில் சந்தேகத்தை கொண்டுள்ளது.சிலபேர் செய்யும் தவறால் உண்மையான நட்புக்கு கூட மரியதை இல்லை.
மூன்று பேர் நண்பர்களாக இருந்தால் அதில் ஒருவன் தவறானவாக இருந்தால் அந்த ஒட்டு மொத்த நண்பர்களையும் தவறாக சொல்வது இந்த சமூதயத்தின் வேலை.
"உன் நண்பனை பற்றி சொல் உன்னை பற்றி சொல்கிறேன்" என்று சொன்னால்,யாரும் நண்பனாக இருக்கமுடியாது ,நல்லவர்கள் மட்டும் நண்பர்களாகி விட்டால் ,தவறான வழியில் செல்பவர்களை யார் வழிநடத்துவது.
கெட்டவர்கள் இருந்தால் அந்த நட்பு கெட்ட நட்பும் .நல்லவர்கள் இருந்தால் அது நல்ல நட்பும் என்றும் சொல்வது வேடிக்கையான விஷயம்.
ஒரு நண்பர்கள் கூட்டத்தில் ஒரு கெட்டவன் இருந்தால் அவனை ஒழுங்குபடுத்துவது ஒரு உண்மையான தோழனின் கடமை.
"மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்"அதுபோல் ஒரு நல்ல நட்பு ,அதை வைத்து நல்ல சமூகம் அமைவதும் இறைவனின் செயலே!
ஒரு சமூதாயத்தில் ஒரூவன் நல்ல நிலையில் இருக்கவேண்டும் என்றாலோ இல்லை அவன் ஒரு நல்ல மனிதனாக இருக்க வேண்டுமென்றாலோ ,பெற்றோர் அல்லது நண்பர்கள் நல்லவர்களாக அமைய வேண்டும்.
நாம் நன்றாக இருந்தால் சமூதாயம் நன்றாக இருக்கும்.அதுபோல் தான் நட்பும்,நாம் ஒவ்வருவரும் நன்றாக இருந்தால் நட்போடுகூடிய சமூகமும் நல்லதாக இருக்கும்.

கடைசியாக நான் ஒன்று சொல்லிகொள்கிறேன்,தயவு செய்து நட்பு என்னும் பெயரை வைத்துக் கொண்டு உங்கள் தவறான செயல்களுக்கு,அதை ஒரு விளையாட்டு பொருளாக பயன்படுத்தாதீர்கள்.அது போல் இந்த சமூதாயத்திற்கு,ஒரு ஆண் பெண் பழகுவதை தவறான கண்ணோட்டத்தை பார்க்காதீர்கள்.சமூதாயம் என்பது நாம் தான் .ஆதலால் நம்முடைய கண்கள் ஒழுங்கான பாதையில் செல்லவேண்டும்.எண்ணங்கள் தூய்மையாக இருக்கும்.
நாம்+நட்பு=சமூகம்

6 comments:

இளைய நிலா said...

உங்கள் சமூகமும் நட்பும் கட்டுரை அருமை..

தொடரட்டும் உங்கள் பணி..

அழகான ராட்சசி said...

//உங்கள் சமூகமும் நட்பும் கட்டுரை அருமை..

தொடரட்டும் உங்கள் பணி..//

நன்றி

narsim said...

//ஒரு ஆண் பெண் பழகுவதை தவறான கண்ணோட்டத்தை பார்க்காதீர்கள்.//

16 வயதினிலே யில் கமல் சொல்வதுதான் நினைவிற்கு வருகிறது.. நாந்தான் கோபல கிருஷ்ணன்,கோபாலகிருஷ்ணன்னு சொல்லிகிட்டு இருக்கேன்.. சப்பானினுதான் கூப்டுறான்.

சமூகம் என்பது நாம்தான் என்பது மிகச்சரியான கருத்து.. நாம் மாறினாலே அது சமூக மாற்றம் தான்..

கலக்கல்!

தொடருங்கள்

நர்சிம்

அழகான ராட்சசி said...

//சமூகம் என்பது நாம்தான் என்பது மிகச்சரியான கருத்து.. நாம் மாறினாலே அது சமூக மாற்றம் தான்.. //
அனைவரும் மாறினால் சரிதான் .

Dominic RajaSeelan said...

அருமை அன்பரே , உங்கள் கருத்து மிகவும் அருமை.


முடிந்தால் இதை படித்து பாருங்கள்

http://makkalai-thedi.blogspot.com

Unknown said...

அழகு கட்டுரை....தமிழை பிழையின்றி எழுதவும்