Thursday, August 24, 2006

கோபம்

மனிதனின் மிகப்பெரிய எதிரி யார் என்று கேட்டால் அனைவரின் பதில் என்னவாக இருக்கும் தெரியுமா?அவரவர் வாழ்க்கையில் வந்துபோகும் மனிதர்களை பற்றிதான் சொல்வார்கள்.ஆனால் என்னுடைய பதில் என்ன தெரியுமா.கோபம்
இந்த கோபம் என்ற வார்த்தை மூன்று எழுத்தாகத் தான் தெரியும்.ஆனால் இதனால் எத்தனை மனிதர்கள் கொலைக்காரனாகவும்,மிருகங்களாகவும்,எதிரியாகவும் மாறியிருக்கார்கள்,தெரியுமா?
கோபம் வந்தால் நாம் என்ன செய்கிறோம் என்பது நமக்கே தெரியாது.ஆனால் இது தவறு.கோபம் நமக்கு அடிமையாக வேண்டுமே தவிர அதற்கு நாம் அடிமையாக கூடாது.கோபம் என்ர மிருகத்தை எப்படி நமக்குள் கொண்டுவருவது,என்பதை எனக்கு தெரிந்தவரை சொல்கிறேன்.
கோபம் வந்தால் நம் மனதிற்குள்ளே நாம் 1முதல் 10 வரை எண்ணிக்கொள்ளலாம்,அல்லது அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடலாம்,அல்லது தனியாக சென்று அவர்களை மனதிற்குள்ளோ,வெளிபடையாகவோ அவர்கள்ககதில் விழாமல் திட்டிக்கொள்ளளாம்.இதையும் நம் கோபம் தணியவில்லை என்றால் அவர்களின் புகைப்படத்தை நம் முன் வைத்துக்கொண்டு கையில் கிடைத்ததை வைத்து அடிக்கலாம் ,உதைக்கலாம்.
என்ன நான் சொன்னமாதிரி செய்துபாருங்கள் கண்டிப்பாக உங்களுக்குள்ளே ஒரு மாற்றம் தெரியும்.என் கோபத்திற்கு இதுதான் மருந்து.அதுபோல் உங்களுக்கும் இருக்கவேண்டும் என்று என்னுடைய அவா.

Wednesday, August 23, 2006

நினைத்து பார்க்கவில்லை

உன் கண்கள் என்னை பார்க்கும் பொழுதும்
உன் கைகள் என்னை தொடும் பொழுதும்
உன் இதழ்கள் என்னிடம் பேசும் பொழுதும்
உன் கால்கள் என் பின்னே
வரும் பொழுதும்
நீ சுவாசிக்கும் காற்றை நான் சுவாசிக்கும் பொழுதும்
நான் உனக்காக பிறந்தவள் உனக்காக
என்னை இறைவன் படைத்தான் என்று
நினைத்தேன்
ஆனால்
வேறு பெண்ணுக்காக என்னை தூது
அனுப்ப இந்த செய்கைகள் என்பதை
நினைத்து பார்க்கவில்லை.

பெண்ணே

வறுமையை கொடுமையாக நினைத்து
நீ ஏன் வரதட்சணையை மட்டும்
கொடுமையாக நினைக்கவில்லை
வாழ்க்கை மட்டும் போதும் என்று
நினைத்துவிட்டாயா?

அழகை சொல்வாயாக

வானத்தில் பறந்து செல்லும் பறவைகளே
வானத்தின் அழகை சொல்வாயாக
பூமியில் ஊர்ந்து செல்லும் அஃறிணைகளே
பூமியின் வளத்தை சொல்வயாக
மலையில் இருந்து பாய்ந்து வரும்
தண்ணீரே அதன் செழிப்பை சொல்வயாக
வாழ்க்கையை வாழ்ந்து வரும் மனிதனே
வாழ்வின் நெறிகளை சொல்வாயாக.

Tuesday, August 22, 2006

நரபலி

ஒரு மரம் எதீர்பாத்தது தனக்கு மனிதன் நீர் ஊற்றூவான் என்று
ஒரு காகம் எதிர்பார்க்கும் தனக்கு உணவு வரும் என்று
ஒரு உழவன் எதிர்பார்ப்பான் இன்று மழை வரும் என்று
ஆனால்
எதையும் எதிர்பார்க்காமல் பிறக்கும் குழந்தைக்கு
மனிதன் வைத்திருப்பது நரபலி ஒன்று
இது
பக்தியின் சீற்றத்தால் அல்ல
வெறியின் சீற்றத்தால்.

சாதனை

சோதனையை வேதனையாக
தாங்கும் மனிதனே
சோதனையை சாதனையாக தாங்கு
ஏனென்றால் உலகம் உன் கையில்.

Thursday, August 10, 2006

பெண்களே

பெண்களே
தங்கத்தை காதிற்கு பூட்டியும்
வெள்ளியை காலிற்கு பூட்டியும்
வைத்த நீங்கள்
பேராசையை மட்டும் ஏன் பூட்ட
மறந்துவிட்டீர்கள்?

Sunday, August 06, 2006

திரியில்லாமல் தீபம் எரிவதில்லை
உணவில்லாமல் விலங்குகள் வாழ்வதில்லை
மணமில்லாமல் மலர்கள் பூப்பதில்லை
இடியில்லாமல் மழை வருவதில்லை
காற்றில்லாமல் சுவாசிக்க முடிவதில்லை
அதுபோல்
நீயில்லாமல் நான் இருப்பதில்லை

Friday, August 04, 2006

ஹைக்கூ

கலங்கிய
நெஞ்சத்திற்கு
அமுத
விஷமாய் இருந்தது
குடி
************
தெளிந்த
நீரோடையாய்
வாழ்ந்த பெண்ணுக்கு
புயல் வந்து வீசியது
வரதட்சணை கொடுமை

பெண்ணே நீ போராடு

பெண்ணே

நீ போராடுவது பிடித்திருக்கிறது

அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பதெற்கு

என்று கூறிய சொல்லை

பொய்ப்பித்தது பிடித்திருக்கிறது

உன்னை விலை பேசி வரதட்சணை

என்னும் கொடுமையால் விற்ற ராட்சசர்களை

காலால் எட்டி உதைத்தது பிடித்திருக்கிறது

துன்பம் வந்த போதும் துவளாமல்

அதை எதிர்த்து போராடியது பிடித்திருக்கிறது

இன்னும் போராடிக் கொண்டிருப்பது பிடித்திருக்கிறது

நீ இருந்தால்

நீ ரோஜாவாக இருந்தால் - அதன்
முள்ளாய் நான் இருப்பேன்
நீ மல்லியாக இருந்தால் - அதன்
மணமாய் நான் இருப்பேன்
நீ தாமரையாக இருந்தால் - அதனை
தாங்கிக் கொள்ளும் இலையாய் இருப்பேன்
நீ அல்லியாக இருந்தால் - அதன்
இதழாய் நான் இருப்பேன்

என்னவனே
நீ எதுவாக இருந்தாலும் உன்னுடன் என்றும்
நான் இருப்பேன்