Thursday, September 18, 2008

பண்பாடு ,கலாச்சாரம் ,நாகரீகம்

கலாச்சாரம் என்பது ஆச்சாரமாக கொண்டு ஆக்கப்படும் கலையே கலாச்சாரம்.சிறந்த கலைகளை கொண்டு செய்யபட்டது கலாச்சாரம்.நாகரீகம் என்பது கலாச்சாரத்தை மையமாக வைத்து வந்தது ஆகும்.பண்பாடு என்பது இவ்விரண்டையும் சேர்த்து ஒரு கலவையாக கொண்டு பண்படுவது.எத்தனையோ பேர் பண்பாடு பற்றியும்,கலாச்சாரம் மற்ற்றும் நாகரீகம் பற்றியும் எழுதியிருப்பார்கள்,நானும் என்னுடைய கருத்துக்களை எழுதுகிறேன் படியுங்கள்.
இப்பொழுது உள்ள மனிதனுக்கு இந்த மூன்றும் உள்ளதா? என்பது என்னுடைய கேள்வி.அதற்கு பதில் என்னிடம் கொஞ்சம் உள்ளது.பண்பாடு என்பது இல்லை என்றே நான் சொல்லுவேன்,.கலாச்சாரமும் நாகரீகமும் நம் தேசத்தில் எங்கேயோ சென்று கொண்டிருக்கிறது.
நாகரீகம் என்ற பெயரில் பெண்கள் செய்யும் அட்டூழியங்கள் அளவில்லதாவை.சில பெண்களை நான் குறிப்பிட்டு சொல்கிறேன்.இந்த வரிகள் ஆண்களுக்கும் பொருந்தும்.
நாம் அணியும் உடையிலும் சரி நாம் வாழும் வாழ்க்கையுலும் சரி ,மற்றவர்களிடம் அணுகும் பழகும் முறையிலும் சரி ,நாகரீகம் என்பது இருக்கவேண்டும் ஆனால் கலாச்சாரத்தோடு கூடிய பண்பாடும் இருக்கிறது என்று எத்தனை பேர் பார்க்கிறோம்.
நல்ல நாகரீகத்தோடு வாழ்கிறோம் என்ற பெயரில் பண்பாடு காணாமல் போய்விடுகின்றது.
ஒரு ஆண் பெண்பார்க்க போனால் அவள் நல்லவளா நமக்கு ஏற்றவளா? என்று பார்ப்பதை விட அவள் நாகரீகம் தெரிந்தவளா நம்முடைய பழக்கத்திற்கு ஏத்தவளா? என்று பார்க்கிறார்கள்.நான் இதை தவறு சொல்லவில்லை ஆனால் முக்கியமானது வேண்டும் அல்லவா?
அண்டை நாட்டு பழக்கங்கள் நம்மை எவ்வளவு தூரம் கவர்ந்துள்ளது என்பது நம்மிடமே நாம் பார்க்கலாம்."பேஷன் ஷோ" என்ற பெயரில் நம்முடைய கலாச்சாரம் மற்றும் பண்பாடும் தெரிகிறது.இவர்கள் அணியும் ஆடைகள் நன்றாக உள்ளதா என்று சரிபார்ப்பதற்கு ஒரு கூட்டம் இருக்கும் மற்றும் மதிப்பெண்கள் போட ஒரு கூட்டம் இருக்கும் .ஆனால் இதை வெளியில் இருந்து சொன்னால் மேன்ர்ஸ் இல்லையா என்று நம்மையே கேள்வி கேட்பர்.நான் யாரை பற்றி சொல்கிறேன் என்று உங்களுக்கே தெரியும்.என்னடா பெண்கள் சுதந்திரம்,சாதனை என்று பேசிவிட்டு இப்பொழுது பெண்களை பற்றி குறை சொல்கிறேன் என்ரு நினைக்கவேண்டாம் ,நியாயம் என்று உள்ளதல்லவா?இங்கேயும் சில பெண்கள் என்றே குறிப்பிடுகிறேன்.
வெளிநாட்டு பழக்கவழக்கங்களை நம் நாட்டில் கொண்டுவந்து ஆடும் ஆட்டங்கள் அப்பப்பா!..
அந்த ஆட்டத்தில் படீத்தவர்கள் படிக்காதவர்கள் என்ற பாகுபாடு எல்லாம் கிடையாது.
நிறைய படித்தவர்கள் தான் "பப்" என்னும் ஒரு பெயரை வைத்து போடும் கும்மாளங்கள்...
இப்படி நாகரீகம் எல்லை மீறி போய்விட்டது..இப்படி எல்லை மீறுவதால் கலாச்சாரம் சீர்கெடுகிறது.பண்பாடு குறைகிறது.
தன் குழந்தைகள் "மாடர்ண்" ஆக இருக்கவேண்டும் என்பதற்காக பெற்றோர்கள் செய்யும் தவறுகள் நிறைய சொல்லலாம்.மற்ற பிள்ளைகளை விட தன் குழந்தை நல்ல அறிவாளியாக இரூக்கவேண்டும் என்ற எண்ணத்தை விட மாடர்னாக இருப்பதை விரும்புகிறார்கள்.
தன் குழந்தை ஆங்கிலத்தில் பேசினால் அவர்கள் படும் சந்தோஷம் எல்லையே இல்லை.
தமிழ் எங்கள் மூச்சு என்று வாதடுபவர்களின் குழந்தைகள் ஆங்கிலம் நிறைவாக உள்ளவர்களாக தான் இருப்பார்கள்.இதற்காக நான் தப்பு சொல்லவில்லை.நாகரீகம் வளர்ந்துவிட்டது.
முன்பெல்லாம் திருமணம் என்றால் பட்டு சேலை இருக்கும் இப்பொழுது "சல்வார்கமீஸ்",காக்ரா",சோலி" என்று உடைகளை விதவிதமாக அணிகின்றனர்.மாப்பிள்ளை சொன்னாலோ இல்லை கூடியிருப்பவர்கள் சொன்னால் தான் மணபெண் யாரென்று தெரியும்.இவர்களை சொல்லி தப்பில்லை,கலாச்சாரம் அப்படி உயர்ந்துவிட்டது
பெரியவர்களை கண்டால் அவர்கள் வணக்கம் சொல்வதுபோய்,இப்பொழுது வயது வரம்பு பார்க்காமல்"ஹாய்","ஹலோ" என்று சொல்கின்றனர்.இவர்களை குற்றம் சொல்லமுடியாது,ஏனென்றால் வணக்கம் சொன்னால் யார் திரும்புகிறார்கள்.
பண்பாடு அந்த அளவு உயர்ந்துவிட்டது.
நாட்டில் கலாச்சாரம், பண்பாடும் நன்றாக அமைய பாடுபடுவோம் என்று சொன்னால் அதை பின்பற்றுவது கஷ்டம்தான்.இருந்தாலும் முயற்சி செய்வோம்!...................

4 comments:

Anonymous said...

எனக்கும் சற்று பயமாகவே உள்ளது

Anonymous said...

//எனக்கும் சற்று பயமாகவே உள்ளது//

ரிப்பீட்டேய்...

கிருபா said...

நீங்கள் சொல்வது வாஸ்தவந்தான் ,நானும் வழி மொழிகிறேன். என்னாதான் சொன்னாலும் இதை யாரும் ஏற்றுக்கொள்வார்களா என்பது கேள்விகுறிதான் . இருந்தாலும் நாகரீகம் என்ற பெயரில் பழைய கலாச்சாரம் திரும்பவும் வந்து கொண்டுதான் இருக்கிறது என்பதை நாம் மறுக்கவும் முடியாது. என்ன தான் இருந்தாலும் கலாசாரம் சீரழிந்து கொண்டுதான் இருக்கிரது என்பதில் ஐயமில்லை.

மங்களூர் சிவா said...

//எனக்கும் சற்று பயமாகவே உள்ளது//

ரிப்பீட்டேய்...


தாமதமான நட்சத்திர வாழ்த்துக்கள்