Saturday, September 06, 2008

பெண்கள் சுதந்திரம்!........?

பெண்கள் சுதந்திரம் என்றால் என்ன?எத்தனை பெண்கள் முழு சுதந்திரம் அடைந்துள்ளார்கள் சொல்லுங்கள் பார்க்கலாம்.இந்த மண்ணில் எத்தனையோ குழந்தைகள் பிறக்கிறார்கள்,எத்தனையோ குழந்தைகள் இறக்கிறார்கள்,நம்மால் சொல்லமுடியாதவை.ஆனால் தெரிந்தது ,ஒரு குழந்தை பிறக்கும் போது ஆயிரம் குழந்தைகள் இற்க்கின்றன.இது அனைவருக்கும் தெரிந்ததே!..
ம்ம்..
பெண்களுக்கு முழு சுதந்திரம் கிடைத்ததா என்றால்,என்னால் இதற்கு பதில் சொல்லத்தெரியவில்லை.ஏனென்றால்,இரண்டு கெட்டான் நிலையில் உள்ளது என்றுதான் சொல்லுவேன்.
எத்தைனையோ புலவர்கள் தன்னுடைய கவிதைகளின் மூலமும் பாட்டின் மூலமும் கூறியுள்ளார்கள்.

ஒரு பெண் எப்படி இருக்கவேண்டும் என்றும் அவளுக்கு கல்வி எவ்வளவு முக்கியம் என்றும் தங்களது பாட்டின் மூலம் தெரிவித்துள்ளனர்.ஆனால் இப்பொழுது கல்வி விசயத்தில் பெண்களை மீற யாரும் இல்லை என்றே சொல்லலாம்.

சரி,ஒரு பெண் எப்பொழுது பெண்ணாகிறாள்,என்பது அனைவருக்கும் தெரிந்ததே,இருந்தாலும் நான் சொல்ல வேண்டியது,
ஒரு பெண் பிறக்கும் போது 25 மதிபெண்களை பெறுகிறாள்,பிறகு பெறியவளாகும் பொழுது 25ம்,கல்யாணம் செய்து மனைவி என்னும் ஸ்தானத்தை அடையும் பொழுது 25ம்,பிறகு குழந்தை பெற்று தாய் ஸ்தானத்தை அடையும் பொழுது 25ம் பெறுகிறாள்,இதில் 100 மதிப்பெண்கள்,பெற்றாலும் அவள் இதை அடைவதற்கு பெற்ற துன்பங்கள்,அளவில் இல்லாதவை,ஆனால் அவளுடைய துன்பங்கள்,தொடரும்,
நாம் எத்தனையோ காலங்களை கடந்துவிட்டோம்,எத்தனையோ விஷயங்கள் மாறிவிட்டன,அந்த காலத்தில் உள்ள பெண்களைவிட ,இந்த காலத்தில் உள்ளவர்கள்,ஐயோ!சொல்லவே வேண்டாம்,

ஆனால் இவர்கள் எவ்வளவு உயர்ந்தாலும் ,துன்பம் என்பது தொடர்ந்துகொண்டே இருக்கிறது,ஒரு பெண் பிறந்த உடன் தாய் தந்தையறிடம் வளர்கிறாள்,எத்தனை பெற்றோர்கள்,பெண்களின் இஷ்டபடி போகவிடுகிறார்கள், எண்ணி பார்த்தால் அதிகமாக இல்லை,
அவள் கல்வி கற்கும் விஷயத்தில் இருந்து அவள் வாழ்க்கை விஷயம் வரை பெற்றோரே,
இது எல்லா பெண்களுக்கும் பொருந்தும் என்று சொல்லமுடியாது.
சில பெண்களுக்கு கிடைக்கும் சுதந்திரத்தை வேறு வழியில் பயன்படுத்துகிறார்கள்,அவர்களை பற்றி பேசவில்லை,ஆனால் எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்காதா என்று ஏங்கிக்கொண்டிருக்கும் பெண்களை பற்றி பேசுகிறேன்.
சில வீடுகளில் பெண்கள் கல்வி முடிப்பது என்றால் அது ஒரு பெரிய விஷயம்.அவர்களுடைய எண்ணங்கள் எல்லாம் ஒரு கனவு.சரி நம் உணர்வுகளை நம் பெற்றோர்கள் தான் புரியவில்லை நமக்கு வாய்ப்பவர் புரிந்து கொள்வார்,என்று மனதை அமைதிப்டுத்திக்கொண்டு வாழும் எத்தனையோ பேர்,
நமது வாழ்க்கையை நன்றாக தீர்மானிப்பார்கள் என்று பெற்றோரிடம் ஒப்படைத்து விட்டு ,பெருமூச்சினை விடும் பெண்கள்,திருமணம் ஆன பிறகு பெருமூச்சு விடக்கூட நேரம் இல்லாமல் தவிக்கின்றனர்,சில பெண்கள்.

இப்படி பெண்கள் சுதந்திரத்தை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.இன்னும் சில இடங்களில் சில பெண்களுக்கு உண்மையான சுதந்திரம் கிடைக்கவில்லை என்றே நான் சொல்லுவேன்.
அவர்களுக்கு தங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய உரிமை இல்லை என்றே சொல்லலாம்.
நிறைய இடத்தில் அடுப்புகள் வெடிக்கின்றன,
இன்னும் எத்தனை பாரதியார் வந்தாலும் ,சிலரை மாற்றுவது கஷ்டம் தான்.
பெண்களுக்கு முழு சுதந்திரம் கிடைத்ததா என்றால் என்னுடைய பதில் ............................?

13 comments:

Anonymous said...

நட்சத்திர வாழ்த்துக்கள் ராட்சசி

narsim said...

//ஒரு பெண் பிறக்கும் போது 25 மதிபெண்களை பெறுகிறாள்,பிறகு பெறியவளாகும் பொழுது 25ம்,கல்யாணம் செய்து மனைவி என்னும் ஸ்தானத்தை அடையும் பொழுது 25ம்,பிறகு குழந்தை பெற்று தாய் ஸ்தானத்தை அடையும் பொழுது 25ம் பெறுகிறாள்//


நீங்கள் கூறும் "பூவை, பாவை,மங்கை,மடந்தை,அறிவை,தெறிவை,பேரிளம்பெண்" பருவத்திற்கேற்ப மதிப்பெண்கள் எல்லாம் இன்னும் இருக்கிறதா என்பது ஐயமே.. எல்லாத்துறையிலும் பெண்களின் பங்கு குறிப்பிடும்படி உள்ளது.. எங்காவது அசம்பாவிதம் அல்லது பிரச்சனை என்றால்.. அதற்கு காரணம் வேறு ஒரு பெண்ணாகத்தான் உள்ளது பெரும்பாலும்..

இன்னும் வளருங்கள்.. வாழ்த்துக்கள்..

நர்சிம்

chandru / RVC said...

நமது சமூகத்தின் அடிப்படைக் கட்டமைப்பு ஆண்களை மையப்படுத்தியே உள்ளது.மாற்றங்கள் நிச்சயம் வரும்.நல்ல பதிவு, நட்சத்திர வாழ்த்துகள் !

இளைய நிலா said...

பெண்கள் சுதந்திரம் மறுக்கப் படுதலுக்கு மிகவும் முக்கியமான காரணங்களில் ஒன்று பெண்களே..இதை நான் என் வாழ்வில் பார்த்திருக்கிறேன்..தவிர்க்கமுடியாமல்..

Subbiah Veerappan said...

நட்சத்திர வாழ்த்துக்கள் சகோதரி!

ராமலக்ஷ்மி said...

பெண்கள் எவ்வெப்போது மதிப்பெண்கள் பெறுகிறார்கள் என தாங்கள் கூறியிருப்பது சரிதான் எனினும் அது ஒரு தொடர் சங்கிலி ஆகி விட்டது. தாய் ஸ்தானமும் தாண்டி, மாமியாராகுவது (அப்போதும் பாரங்கள் இறங்கிட வழியின்றி தொடர்ந்து குடும்பத்துக்காக உழைப்பது),பாட்டி ஸ்தானத்தில் குழந்தைகளை வயது இடங்கொடுக்கா விட்டாலும் மன உறுதியிலும் ஆசையிலும் மக்கள் வேலைக்குச் சென்று விட கைக்குழந்தை பருவத்தில் இருந்து பார்த்துக் கொள்ள ஆரம்பிப்பது என...அவர்கள் மதிப்பெண்கள் பெறும் நிலையெல்லாம் தாண்டி விடுகிறார்கள் சமயங்களில்.

அதே போல எல்லா துறைகளில் பெண்கள் காலூன்றி முன்னேறி வருவது மகிழ்வைத் தந்தாலும், வீட்டையும் கவனிக்கிற பொறுப்புகளை முதுகில் தாங்கி முதுகை உடைக்கப் போகும் கடைசி வைக்கோல் பிரி எதுவாக இருக்கப் போகிறதோ எனச் சிந்திக்கும் நேரம் திராணி கூடயின்றி பயணப் படும் ஒட்டகங்களாகவே இருக்கின்றனர். விதிவிலக்காய் வாழ்க்கையை பாலன்ஸ்டாக கொண்டு செல்லத் தெரிந்தவர்களும் இருக்கிறார்கள் என்றாலும் பெரும்பான்மையினரின் நிலை இதுதான் என்பது எனது கருத்து.

அழகான ராட்சசி said...

நன்றி

அழகான ராட்சசி said...

//நீங்கள் கூறும் "பூவை, பாவை,மங்கை,மடந்தை,அறிவை,தெறிவை,பேரிளம்பெண்" பருவத்திற்கேற்ப மதிப்பெண்கள் எல்லாம் இன்னும் இருக்கிறதா என்பது ஐயமே.. எல்லாத்துறையிலும் பெண்களின் பங்கு குறிப்பிடும்படி உள்ளது.. எங்காவது அசம்பாவிதம் அல்லது பிரச்சனை என்றால்.. அதற்கு காரணம் வேறு ஒரு பெண்ணாகத்தான் உள்ளது பெரும்பாலும்..//
நான் குறிப்பிட்டது சில பெண்களே.பெண்கள் தவறு செய்ய மூலக்காரணம் ஆண்கள் தானே

அழகான ராட்சசி said...

//பெண்கள் எவ்வெப்போது மதிப்பெண்கள் பெறுகிறார்கள் என தாங்கள் கூறியிருப்பது சரிதான் எனினும் அது ஒரு தொடர் சங்கிலி ஆகி விட்டது. தாய் ஸ்தானமும் தாண்டி, மாமியாராகுவது (அப்போதும் பாரங்கள் இறங்கிட வழியின்றி தொடர்ந்து குடும்பத்துக்காக உழைப்பது),பாட்டி ஸ்தானத்தில் குழந்தைகளை வயது இடங்கொடுக்கா விட்டாலும் மன உறுதியிலும் ஆசையிலும் மக்கள் வேலைக்குச் சென்று விட கைக்குழந்தை பருவத்தில் இருந்து பார்த்துக் கொள்ள ஆரம்பிப்பது என...அவர்கள் மதிப்பெண்கள் பெறும் நிலையெல்லாம் தாண்டி விடுகிறார்கள் சமயங்களில்....//

ஒரு பெண் முழுபெண் பெறுவது அவள் தாயாக ஆகும் பொழுதுதான்.அவர்களுடைய வேலை என்பது தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்

அழகான ராட்சசி said...

//நட்சத்திர வாழ்த்துக்கள் ராட்சசி//

நன்றி

அழகான ராட்சசி said...

//நமது சமூகத்தின் அடிப்படைக் கட்டமைப்பு ஆண்களை மையப்படுத்தியே உள்ளது.மாற்றங்கள் நிச்சயம் வரும்.நல்ல பதிவு, நட்சத்திர வாழ்த்துகள் !//

நன்றி.நானும் மாற்றங்கள் எதிர்பார்க்கிறேன்/

அழகான ராட்சசி said...

//நட்சத்திர வாழ்த்துக்கள் சகோதரி!//
நன்றி

அமுதா said...

/*ஆனால் இவர்கள் எவ்வளவு உயர்ந்தாலும் ,துன்பம் என்பது தொடர்ந்துகொண்டே இருக்கிறது*/

உண்மை தான். இன்று சில இடங்களில் படித்து கை நிறைய சம்பாதிக்கும் பெண்கள் கூட, வீட்டில் பல இன்னல்களுக்கு ஆளாகிறார்கள். குடும்பத்திற்காகவும், சமூகத்திற்காகவும் பல விஷயங்களை விட்டுக்கொடுத்து துன்பதில் உழல்கிறார்கள். ஒரு பெண்ணின் சுதந்திரம், அவளுக்கு அமையும் குடும்பத்தைப் பொறுத்தே இருக்கிறது...