Monday, September 11, 2006

கணவன் -மனைவி

என்ன உறவையே வைத்து எழுதுகிறேனே என்று நினைக்கவேண்டாம்.இப்ப உள்ள கலி காலத்தில் இந்த உறவுக்கு மதிப்பு என்பது குறைந்து கொண்டே வருகிறது.
எல்லா உறவை விட இந்த உறவு மிகவும் முக்கியமானது மற்றும் வலிமையானதும் கூட.ஏனென்றால் இந்த உறவு எந்த இரத்த பந்தமும் இல்லாமல் நம்பிக்கையில் உண்டாவது.இதை புரிந்து கொண்டு வாழ்பவரும் உண்டு, புரியாமல் பிரிந்தவரும் உண்டு.
''கணவனே கண் கண்ட தெய்வம்'' மற்றும் ''கல்லானாலும் கணவன் ;புல்லானாலும் புருசன்'' என்று சொல்வர்.ஆனால் இப்பொழுது இது எல்லாம் கணவில் தான் காண முடிகிறது.
திருமண வாழ்கை என்பது இரு மணமும் இணைவது.அந்த காலத்தில் என்ன நேர்ந்தாலும் கணவனையே கடைசி வரை என்று நினனத்தனர்.இப்ப கணவனின் நடவடிக்கை பிடிக்கவில்லையா அல்லது தனக்கு ஒத்து வரவில்லையா உடனே விவாகரத்து.
குடிக்கும் புருசனை விரும்பாத பெண்கள் இப்பொழுது குடிக்க தெரியுமா ஸ்டைலா இருக்கதெரியுமாஎன்ற முழு விவரம் தெரிந்துதான் கல்யாணம் செய்கின்றனர்.ஆண்கள் மட்டும் என்ன குறைந்தவர்களா என்ன?அவர்களும் இடும் மதிபெண்கள் ,கண்டிஷன்கள் கேட்கவா வேணும்?
எடுத்துகாட்டுக்கு கலர்,கலராத்தான் பொண்ணு வேணும் ,மாடர்ன வேணும் ,ஸ்டைலா வேணும் கேட்பாங்க.ஆனா தான் எப்படி இருக்கோம் பார்க்க மாட்டாங்க.இதே மாதிரி பெண்களும் கணக்கு போட்டாங்கன்னா அப்புறம் திருமணம் என்கிற சொல்லை காகிதத்தில்தான் பார்க்கவேண்டும்.
கணவன் -மனைவி என்பது வண்டியும் அச்சானியும் போல்.இதில் ஒன்று சரியில்லைஎன்றாலும் வண்டி பயன்படாது.அது போல் தான் வாழ்க்கையும்.
மனம் ஒத்து வாழ்ந்தாலே; வண்ணம் தேவைபடாது அழகு தேவைபடாது.
கணவன் மனைவி உறவு பெரிதும் சரியில்லாமல் போவதற்கு காரணங்கள்
கணவன் தன்னை ஒரு பெரிய ஆளாக நினைத்துக்கொள்வது.மனைவின் எண்ணங்களை மதிக்காதது,தன்னை விட கீழே வைத்து பார்ப்பது.தன் பேச்சிற்கோ அல்லது எண்ணங்களுக்கு மதிப்பு கொடுத்து அவர்களின் எண்ணங்களை குழி தோண்டி புதைப்பது.
மனனவி மட்டும் என்ன குறைச்சலா.கணவன் வாங்கிதரும் எந்த பொருளையும் வைத்து நிறைவு காணாதது.புரிந்துக்கொள்ளாமல் போவது.இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.
கணவன் மனைவி எப்படி ஒத்துபோவது.
எந்த முடிவு எடுத்தாலும் இரண்டு பேர் சேர்ந்து எடுக்கவேண்டும்.
மனைவியை இழிவுபடுத்தி பேசுவது தவிர்க்க வேண்டும்
அவரவர் உணர்வுகளுக்கும் ,உரிமைக்கும் மரியாதை கொடுக்கவேண்டும்.
எது செய்யலாம் எது செய்யவேண்டாம் என்பது தெரிந்து நடந்தாலே அமைதியான சந்தோஷமான வாழ்க்கை வாழலாம்.

5 comments:

வடுவூர் குமார் said...

பிரச்சனையே
"நான் ஏன் தாழ்ந்து போகனும்" என்று முடிவதில் தான்.

Anonymous said...

Could you please write more on what women expect and why they end up getting divorced?

அழகான ராட்சசி said...

\\பிரச்சனையே
"நான் ஏன் தாழ்ந்து போகனும்" என்று முடிவதில் தான்//.

5:34 PM

அந்த தாழ்மையை தான் வேண்டாம் என்று சொல்கிறேன்.

அழகான ராட்சசி said...

Could you please write more on what women expect and why they end up getting divorced?

3:
thk u for ur request.if i get any idea surely i will send for u.

Anonymous said...

இது எப்படியிருக்கு!

ஒரு காரை வாங்கி அதை ஓட்டும்பொழுது/வைத்திருக்கும் பொழுது ஏற்படுகின்ற மன நிலையை மனைவியோடு/கனவனோடு வாழும் மனநிலையோடு மிக மிக யதார்த்தமாக பாருங்கள்.

இந்த ஒப்பீட்டை ஒரு 50,40,30,20,0 வருடத்திற்கு என்று பல நிலைகளில் வைத்து பாருங்கள், அதெ போல, ஒரு காரை, விற்கவேண்டும் என்று முடிவு செய்வதற்கு முன், என்ன என்ன நிலைகளில் முடியும் என்று யோசித்து, இன்னும் கொஞ்ச நாள், கடைசி வரைக்கும் அல்லது இப்பவே விற்க முடிவு செய்வீர்கள்.

சில நேரங்களில், உங்க காரோட அருமையை தெரிந்து கொள்வதர்க்காக மார்க்கட்டிர்க்கு போவீர்கள்.

சிலெரெல்லாம் அதை செய்யலாம், இதை செய்யலாம் என்று நினைப்பார்கள், ஆனால் கடைசியில் ஒன்றும் செய்யாமல், இது எங்க அப்பா எனக்கு அன்பளிப்பாக கொடுத்தது என்பது போல் வேறு பல காரணங்களை வைத்து கொண்டும்..

சிலெரெல்லாம் காரோட மதிப்பை தெரிந்து வைத்துகொண்டும், அதை பயன்படுத்துவதை அவர்களோட குறிக்கோளில் கோண்டுவந்தும், அதனோட மதிப்பு குறையாமல் செய்யவேண்டுவதை செய்து எப்பொழுதும் விரும்புகின்ற மாதிரி செய்துகொள்கிறார்கள்.


எனவே, இதுதான் சரி, இல்லை அதுதான் சரி என்று சொல்லாமல்,

மதிப்பை தெரிந்து வைத்துகொண்டும், அதை பயன்படுத்துவதை அவர்களோட குறிக்கோளில் கோண்டுவந்தும், அதனோட மதிப்பு குறையாமல் செய்யவேண்டுவதை செய்து எப்பொழுதும் விரும்புகின்ற மாதிரி செய்துகொள்ளுங்கள். ஒன்னும் முடியவில்லை என்றால் மார்க்கட்டிர்க்கு போய் உங்களோட மதிப்பை தெரிந்து கொள்ளுங்கள்.