Wednesday, September 06, 2006

மாமியார்-மருமகள்

இந்த தலைப்பை பார்த்தால் வித்தியாசமாக தோன்றும்.இந்த உறவு எப்படிப்பட்ட உறவு என்பது யாராலும் உணர முடியாது.ஏன் என்னாலும் தான்.இன்றும் இந்த உறவு விசமமானது மற்றும் ஆபத்தானது என்று தான் அனைவரின் எண்ணத்திலும் உள்ளது.
ஆனால் இதை நல்ல முறையில் கையாண்டால் நம் புவியில் மண்ணெண்ணை, கேஸ் அடுப்பு இதெல்லாம் வெடிக்காது.
மருமகள் என்பவள் இன்னொரு மகள் என்பதை இன்னும் எந்த மாமியாரும் உணரவில்லை.மாமியார் இன்னொரு தாயாக இல்லாவிட்டாலும் குறைந்த பட்சத்தில் தாய் ஸ்தானத்தில் வைத்து பார்ப்பது கிடையாது.
எங்கேயாவது மாமியாரும் மருமளும் ஒற்றுமையாக உள்ளார்கள் என்று கேள்விபட்டதுண்டா?
எங்கு பார்த்தாலும் சண்டைகள்.இந்த சண்டையில் யார் தலை உருளும் தெரியுமா?அந்த வீட்டின் தலைவர் அதாவது மாமனார்,மற்றும் ஒரு நபர்.மிகவும் முக்கியமானவர்.அந்த மாமியாரின் மகன் மருமகளின் கணவர்.இவரின் நிலைமை மிகவும் மோசமாகத்தான் இருக்கும்.யார் பக்கம் பேசுவது என்பது தெரியாது.சில நேரத்தில் பச்சோந்தியாக மாறவும் வாய்ப்பு இருக்கிறது.
சின்ன சின்ன சண்டை போட்டாலும் மற்ற இடத்தில் இவர்கள் விட்டுகொடுக்கமாட்டார்கள்.(சில மாமியார்-மருமகள்).
இதை தீர்ப்பதற்கு எவ்வளவு பெரிய சீமான்கள் தலைவர்கள் வந்தாலும் தீராது.
ஆனால் என்னால் முடிந்தவரை சொல்லும் தீர்வு.
மாமியார்கள் தாங்கள் மருமகளாக இருந்த நாட்களை நினைத்து பார்க்கவேண்டும்.அது போல் மருமகள் தாங்கள் மாமியாராக போகும் காலத்தை நினைத்துப்பார்க்க வேண்டும். இது போல் நடந்தால் இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு இருக்கும் என்பது என்னுடைய நம்பிக்கை.

5 comments:

வல்லிசிம்ஹன் said...

மாமியார்களும் மருமகள்களும் யுக யுகாந்திரமாக
இப்படித்தான் இருக்கும்.
இவர்கள் ஒன்றுபடும் நாட்களும் உண்டு.
எப்போது தெரியுமா,மகனோ ,மாமனாரோ
தப்பு செய்து அது வெளியிலும் தெரிய வரும்போது தான்.அப்போது இந்தப் படை சேர்ந்துவிடும்.
மற்றபடி ரஷியா,அமெரிக்கா--
இரவு பகல், இன்னும் எவ்வளவு எதிர்மறைகள் இருக்கிறதோ அத்தனையும் போட்டுக்குங்க.
20% எங்களை மாதிரி.எக்சப்ஷன்.:-))

அழகான ராட்சசி said...

\\மகனோ ,மாமனாரோ
தப்பு செய்து அது வெளியிலும் தெரிய வரும்போது தான்.அப்போது இந்தப் படை சேர்ந்துவிடும்.\\
இந்த இடத்திலேயும் யாரை காப்பத்திறதுன்னு சண்டை நடக்கும்.

லதா said...

// 20% எங்களை மாதிரி.எக்சப்ஷன்.:-)) //
எங்கள் இல்லத்திலும் உங்கள் இல்லம்போலத்தான். (த்ருஷ்டி பொம்மை போல ஏதேனும் இமோட்டிகான் இருந்தால் அதைப் போட்டுக்கொள்ளவும்)

Anonymous said...

திருமணம் முடிந்து ஒர்ஆண்டு முடிந்து விட்டது. மருமகளுக்கு சமையல் அறையில், உரிமை கொடுக்காத, வீடை ஒதுங்க வைப்பது, சாமி ரூமில் சுத்தம் செய்வது, விளக்கு விளக்குவது போன்ற உரிமையை கொடுக்காத மாமியாரை என்ன செய்வது. வேலை ஆட்கள் செய்யும் பாத்திரம் கழுவுவது. துணி துவைப்பது, வீடு கழுவுவது. போன்ற வேலைககளை மட்டும் செய்வது தான் மருமகள் கடமையா? மருமகளின் உணர்வுகளுக்கு அனுமதி கொடுக்காத மாமியாரை என்ன தான் செய்யலாம். ஒன்னும் முடியாது.

அழகான ராட்சசி said...

True