Sunday, September 21, 2008

மூடநம்பிக்கைகள்

கண்மூடித்தனமான ஒன்றுதான் இந்த மூடநம்பிக்கை.கண்ணைமூடிக்கொண்டு நம்பிவிடும் நபர்கள் நம் உலகில் அதிகமாக உள்ளார்கள்.ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் வளர்ந்துகொண்டும்,வந்துகொண்டும் இருப்பார்கள்,
மக்களுக்கு எந்த வகையில் கூறினாலும் ,புரிந்துகொள்ளாமல் போவதுதான் கொஞ்சம் வருத்தபடக்கூடிய விஷயமாகும்.
ஒவ்வொருவருக்கும் மூடநம்பிக்கை பற்றி பல எண்ணங்கள் இருக்கும் இதில் என்னுடைய கருத்தை கூறுகிறேன்.
இந்த மூடநம்பிக்கை படித்தவர்கள்,படிக்காதவர்கள் என்று பார்க்காமல் உள்ளது.இதனால் அவர்கள் மட்டும் இல்லாமல் மற்றவர்களையும் கஷ்டத்திற்குள்ளாக்கிறார்கள்.பில்லி,சூனியம் இவற்றை நம்புவது,குறி சொல்வதை நம்புவது,.இவ்வாறு நம்புவதால் நம் நாட்டில் போலி சாமியார்களின் எண்ணிக்கை அதிகமாகி விட்டது.தன்னை நம்புகிறார்களோ இல்லையோ இந்தமாதிரி சாமியார்களை நம்புவார்கள்.
எதுத்துகாட்டிற்கு : மனிதன் முதன் முதலில் புது மனை வாங்கினாலும்,புது வீடு புகுவதினாலும்,வேலைக்கு செல்வதிலும் நாள் கிழமைகளை பார்க்கின்றனர்.சொல்லும் கிழமைகளில் செய்தால் நன்றாக விளங்கும் என்ற நம்பிக்கை.ஏதாவது ஒரு வேலை சரியாக அமையவில்லை என்றால் உடனே கிழமைகளீன் மீது பழியை போடுவது.தான் என்ன தவறு செய்துள்ளோம் என்பதை பார்ப்பது கிடையாது.எவ்வளவு அறிவு உள்ளவர்களும் இந்த விஷயத்தில் அறிவு சற்று குறைவாகவே காணப்படுவர்.
இவர்களின் பகுத்தறிவின்மையால் மூளைக்கு மூளை போலி சாமியார்கள் தோன்றுகின்றனர்.
இன்னும் சில கிராமங்களில் நரபலி என்னும் கொடுமையான விஷயம் அதிகம் நடைபெறுகின்றது.பத்து மாதம் சுமந்து பெறும் குழந்தைகளை இவர்களின் மூடநம்பிக்கையால் அநியாயமாக இழக்கின்றனர்.
அடுத்தது கைகுறி சொல்பவர்கள் .இவர்கள் தெருவுக்கு தெரூ உள்ளனர்.இவர்கள் குறி என்ற பெயரில் வீட்டை நோட்டமிட்டு கொள்ளை அடித்து செல்கின்றனர்..இதை செய்தால் இவ்வளவு நன்மை ,அதை செய்தால் அவ்வளவு நன்மை என்று சொன்னால் போதும் தன் சொத்தை விற்க கூட தயங்கமாட்டார்கள்."பட்டால்தான் தெரியும் "என்று சொல்வார்கள்.ஆனால் நம் மக்கள் பட்டாலும் துடைத்துக்கொண்டு திரும்ப செல்வர்.இவர்களை மாற்ற எத்தனை பெரியார் வந்தாலும் திருந்தமாட்டார்கள்.
ராசிகற்கள்.:இது இப்பொழுது மிகவும் பிரபலமாகிவிட்டது.எந்த ஒரு தொலைக்காட்சி பார்த்தாலும் இதுதான்.கொஞ்சநாள்களுக்கு முன்பு என் தோழியை சந்தித்தேன்.அவள் கையில் ஒரு கல் அணிந்திருந்தாள்.நான் கேட்டதற்கு,தனக்கு நல்ல ஒரு வரண் வரவேண்டும் என்பதற்காக அணிந்திருப்பதாக சொன்னாள்.எனக்கு சிரிப்பு வந்தது.அவளுக்கு வரண் உடனே வரும் என்று விதி இருந்தால் வரும்,ஆனால் அவள் நம்பிக்கை அந்த கல் மீது உள்ளது.சரி கல்லை அணிந்து வரண் வந்ததா என்றால் அதுவும் இல்லை .இதை என் தோழியிடம் கேட்டதற்கு,திருமணம் கூடிவரவேண்டும் என்றால் வேறு நிற கல் அணியவேண்டும் என்று கூறிசென்றாள்.என்செய்வது காலம் ,மூடநம்பிக்கைகள் மனிதனின் மூளையை மழுங்கவைத்துள்ளது.என் தோழியை போல் இன்னும் எத்தனையோ பேர்.
இப்படிதான்,வண்டி இருக்கும் அது நன்றாக ஓடுவதற்கு ஒரு எலுமிச்சை பழத்தை தொங்கவிட்டுருக்கும்.அல்லது அதன் மீது ஏறி வண்டி செல்லும்.கேட்டால் அப்பதான் வண்டி நன்றாக ஓடும் என்று கூறுவர்.உள்ளே எத்தனையோ விஷயங்கள் இருக்கும் ,அதை வைத்து வண்டி ஓடாமல் இந்தபழத்தினால் ஓடும் என்று நம்புவர்.இதை நான் கேலியாக சொல்லவில்லை ,கவலையாக சொல்கிறேன்.
இப்பொழுது விஞ்ஞானம் எவ்வளவோ முன்னேறிவிட்டது,ஆனால் இந்த மக்கள், இதில் பின் தங்கியுள்ளனர்.
இன்னொன்று மழை .இது இயற்கை சம்பந்தப்பட்டது.இதற்கு ஏதாவது ஒரு மனிதன் இந்த பலன்.அந்த பலன் என்று சொன்னால் அதை செய்வர்.ஆனால் மழை பெய்யுமா என்றால்? அது தெரியாது.இப்படி இன்னும்......
கள்ளிப்பால் கொடுத்து கொள்வது,தலையில் தேங்காய் உடைப்பது,ஆடு பழிகொடுப்பது,குழந்தையை பழிகொடுப்பது,முள்ளில் ஏறி நடப்பது,இப்படி பல விஷயங்கள் சொல்லிக்கொண்டே போகலாம்.இதையெல்லாம் எடுத்து சொன்னால் நமக்கு பெயர் என்ன தெரியுமா ? நாத்திகன் என்று பெயர்.கடவுள் பற்று இருக்கவேண்டும் ,ஆனால் வெறிதனம் இருக்ககூடாது.இதை செய்,எனக்கு அதை செய் என்று எந்த கடவுளும் சொல்லவில்லை.நாம் அதில் செலவலிப்பதற்கு இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவினால் அவர்களின் வாழ்த்து நம்மை வாழ வைக்கும்.
எழுத்தின் மூலம்,பட்டின் மூலம்,கதையின் மூலம்.மற்றும் நகைச்சுவையின் முலம்,எடுத்துகூறினாலும்,இந்த மூடநம்பிக்கை என்னும் விஷ மருந்து தொடர்ந்துகொண்டேதான் இருக்கும்.என்செய்வது?காலம் செய்த கோலம்...........

Saturday, September 20, 2008

திருமணம் பற்றி சில விஷயங்கள்

திருமணம் என்றால் இருமணம் ஒன்று சேர்ந்து செய்வது ஆகும்.திருமணம் என்றவுடன் அனைவருக்கும் நியாபகம் வருவது.தாங்கள் படும் கஷ்டங்கள்.திருமணத்தில் இரண்டு வகையாக உள்ளது.ஒன்று காதல் திருமணம் மற்றொன்று பெரியவர்களாக பார்த்து செய்வது.ஆனால் துன்பம் என்ரு வரும் போது இந்த இரண்டும் இளைச்சது கிடையாது.
திருமணத்தை பற்றி பெரிய பெரிய புலவர்கள் தங்கள் கருத்துகளை எழுதியுள்ளனர்.
பண்டைய கால திருமணங்கள் எல்லாம் ஒருவாரமாக சிறப்பாக இருக்கும் .ஆனால் இப்பொழுது கொஞ்சம் முன்னேறி ஒரு நாள் எடுத்துக்கொள்கின்றனர்..

"திருமணம் என்பது ஒரு சிறை.அதில் பெண் என்பவள் ஒரு கைதி ,ஆண் என்பவன் சிறை அதிகாரி " என்று பகவன் என்ற பெரியவர் கூறியுள்ளார்.
இவர் சொன்னகருத்தை முழுமையாக ஏற்று கொள்ளமுடியாவிட்டாலும் சில உண்மைகள் உள்ளன.
திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சியக்கப்படுகிறது,என்று கூறுவர்.அது உண்மையா என்று கேட்டால் பல பேரின் கருத்து,இல்லை என்றே இருக்கும்.திருமணம் என்பது அந்த ஒரு நாள் குடும்பத்தினரோடு இருந்து மகிழ்ச்சியாக இருப்பது.ஆனால் அதன் பிறகு வருவது கஷ்டங்களே!
பெரியவர்களால் முடிவு செய்யப்பட்டு செய்வதுதான் பிரச்சனை என்று நினைத்து.தன் வாழ்க்கையை தானே தேடும் பலருக்கு பல கஷ்டங்கள்.காதல் திருமணம் செய்து ஒருவரையொருவர் நன்றாக புரிந்துகொண்டு வாழ்ந்தார்களா என்றால் அவர்கள் தான் முதலில் விவாகரத்துக்கு முன்வருகின்றனர்.
விளையாட்டு நிகழ்ச்சியாக போய்விட்டது இந்த திருமணம்.தங்களது வாழ்க்கையை ஒரு விளையாட்டாக நினைக்கின்றனர்.
அதுபோல் இப்பொழுது நம் நாட்டிலும் திருமணம் ஒரு விளையாட்டு பொருளாக போய்விட்டது.
ஆண்கள் பெண்கள் தங்கள் வாழ்க்கையை ஆரம்பிப்பதற்கு திருமணம் ஒரு வேலியாக பயன்படுத்துவர்.ஆனால் இப்பொழுது நிறைய வழிகள் இருக்கிறது.எடுத்துக்காட்டாக "லிவிங் டூகெதர்"என்ற பெயரைக்கொண்டு வாழ்கின்றனர்.ஆதலால் திருமணம் இரண்டாம் பட்சமாக கருதப்படுகிறது.இப்படி வாழ்ந்து பிடித்தால் திருமணம் செய்து கொள்வர்.இல்லையென்றால் "பி பிரண்ட்ஸ்" என்று சொல்லிவிட்டு செல்வர்.
காதல் திருமணத்தை பொருத்தவரை காதலிக்கும் பொழுது நந்தவனமாக தெரிகிறது.ஆனால் திருமணம் போது ,அதன் பிறகு பலருக்கு போர்களமாகவும்,நரகமாகவும் இருக்கிறது.ஏன் செய்து கொண்டோம் என்ற நினைக்கிற அளவுக்கு போய்விடுகிறது.இதற்கு காரணம் புரிந்துகொள்ளமுடியாத தன்மை,அனைவருக்கும் அவரவர்களுக்கு ஏற்றவாறு துணை அமைந்ததா என்றால் முழுமையாக இல்லை .
திருமணம் எனப்து எதற்காக ஒரு மனிதனின் வாழ்க்கையில் எவ்வளவு முக்கியமென்றால்,ஒரு மனிதன் தன் இளமை இழந்து,இன்பங்களையும் பல நினைவ்வுகளையும் மறந்து,முதுமையில் தனிமை வாட்டும் பொழுது,ஆதரவாய் பார்க்க ஒரு துணைவி -அதற்கு திருமணம் என்பது அவசியம்.
பல ஜாதங்களை வைத்து பஜ்ஜி சொஜ்ஜி ,கெட்டிமேலம் கொட்டி செய்வது மட்டும் திருமணம் கிடையாது.தன்னை நம்பி வருபவளை நல்லபடியாக வைத்து கொள்வதும்,ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாடுடன் வாழ்வதற்க்கும் திருமணம் உள்ளது.ஆனால் இதை எத்தனை பேர் ஒழுங்காக பின்பற்றுகிறார்கள்.
இருவரிடம் நடுவே நம்பிக்கை என்பது சற்று குறைந்தே காணப்படுகிறது.துரோகங்கள் தலைதூக்கியுள்ளன."ஈகோ" பிரச்சனை சொல்லவேவேண்டாம்.அந்த காலத்தில் ஒருத்தர் சம்பாத்தியத்தில் வாழ்ந்து வந்தனர்.ஆனால் இப்பொழுது கல்வி அதிகமாக கற்றதை வீணாக்கமல் வேலை செய்து கொள்வது,அந்த வேலையால் தினமும் ஒரு பிரச்சனை.நீ பெரியவனா,இல்லை நானா? என்ற பிரச்சனை ஒவ்வொரு வீட்டிலும் நடக்கிறது(இரண்டு பேர் சம்பாதிக்கும் வீட்டில்)மண உணர்வுகளை வைத்து திருமணம் செய்வது போய் அந்தஸ்து வைத்து செய்வது அதிகமாகி விட்டது.அதனால் என்னவோ விவகாரத்துக்கள் அதிகமாகிவிட்டது????

திருமணத்தின் போது ஒரு பெண்ணின் கழுத்திலோ காதிலோ கையிலோ தாலியோ ,மெட்டியோ,மோதிரமோ ஏதாவது அணிவார்கள்.ஒருவர் திருமணமானவரா இல்லையா என்பது இதில் எதையாவது வைத்து தெரியும்.யாரும் தன்னை தவறான கண்ணோட்டத்தோடு பார்ப்பதை தவிர்கிறதற்கு வெளியில் தெரியும்வாறு அணிவார்கள் .
ஆனால் இப்பொழுது கண்டுபிடிப்பது கடினமாகிவிட்டது.
நம் சமுதாயத்தில் பல பெண்கள் திருமணம் என்பதை விரும்பாமல் தனியாக வாழ்பவர்கள் உண்டு.நான் முன்பு சொன்னமாதிரி ஒரு சிறையில் வாழ்வதற்கு பல பெண்கள் முன்வருவதில்லை.ஆனும் பெண்ணும் திருமணத்திற்கு பிறகும் நட்பை வளர்த்துகொண்டால் திருமணத்தை ஏன் சிறை என்று சொல்லபோகிறோம்!..
ஒருபெண்ணுக்கு ஆண் என்பவன் தன் வாழ்க்கையில் மிகவும் முக்கியம்,அதுபோல்தான் ஆணுக்கும்.அதற்குதான் திருமணம் என்பது .இருவரும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டுவாழ்ந்தால் திருமணம் எப்பொழுதும் நந்தவனமாகவே இருக்கும்.
இருமணம் கொண்டு இணைவது திருமணம் இல்லையென்றால் வெறுமணமாகும்.

Friday, September 19, 2008

சுயநலம்-பொதுநலம்

சுயநலம் பொதுநலம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் தனிப்பட்ட விஷயம்.ஒவ்வொரு மனிதனின் உண்ர்வுகளை கொண்டுதான் இந்த இரண்டு நலங்களும் அமைகிறது.
சுயநலம் இல்லாத மனிதர்கள் உள்ளார்களா?என்றால் உண்மையாக யாருமே கிடையாது.பொதுநலம் என்பது தானாக உண்டாக்கி கொள்வது .ஆனால் அதிலும் ஒரு சுயநலம் ஒளிந்துகொண்டுதான் இருக்கும்.
அதற்காக பொதுநலம் செய்பவர்களை நான் குற்றம் சொல்லவில்லை.
சுயநலம் என்ற தலைப்பு சற்று வித்தியாசமாகத்தான் இருக்கும் ,ஆனால் இந்த தலப்பில் எழுதுவதற்கு காரணம் இதனால் வரும் துன்பங்கள் சலிப்புகள் என்னவென்று சொல்வதற்குதான்.
அதிக சுயநலம் கொண்டவர்களால் உறவுகளின் முன் நல்ல ஒரு பழக்கம் வைத்து கொள்ளமுடியாது.நாம் வாழும் வாழ்க்கையில் ஏதாவது ஒரு சுயநலவாதியை சந்தித்து கொண்டுதான் இருப்போம்.அவர்கள் சுயநலமானவ்ர்கள் என்பது நமக்கு ஏதாவது ஒரு கஷ்டத்தில் உதவாமல் இருப்பவர்களை கண்டால் நம்க்கு தெரியும்.
முக்கியமாக பெண்களுக்கு சுயநலம் அதிகம் கொண்டவர்களாக இருப்பர்.
பெண்கள் சுயநலமாக இருப்பதற்கு காரணங்கள் கொஞ்சம் நியாயமானதாக இருக்கும்.ஆனால் ஆண்களுக்கு இருப்பது கொஞ்சம் ஆச்சரியப்படகூடியதே.
சுயநலத்தை தந்தை பெரியார் தன்னுடைய எழுத்தில் அழகாக சொல்லியுள்ளார்
"சுய நலத்துக்கு அறிவே தேவையில்லை உணவுக்கு அலைவதும்,உயிரைக்காப்பதும் எந்தச்சீவனுக்கும் இயற்கை.ஒவ்வொரு சீவனிடத்திலும் ஒவ்வொரு அருமையான, அற்புதமான, அதிசயமான குணங்கள் உண்டு என்றாலும் அவற்றையெல்லாம் அந்தந்தச் சீவனின் சுயநலத்துக்கேதான் பயன்படுத்துகின்றன "
சுயநலத்திற்கு அறிவு தேவையில்லை என்றே சொல்லலாம் .
சுயநலம் நல்லதா என்றால் ரொம்ப அறுவருப்பானது என்றே சொல்லுவேன்.
நம்முடைய வாழ்க்கை ,நம்முடை சந்தோஷம், நம்முடைய செல்வம் என்று குறிகோளாடு வாழ்வது ஒரு வாழ்க்கை கிடையாது என்றே நான் சொல்லுவேன்.
நாமே வாழ்ந்து கொண்டிரூந்தால் என்ன லாபம்.நம்மால் இயன்றவரை மற்றவர்களுக்கு செய்யும் உதவிகள் அவர்கள் வாயால் நம்மை வாழ்த்துவது இப்படி இருந்தால் வாழ்க்கை ஒரு அர்த்தமுடையதாக இருக்கும்.
நாம் என்ன நினைக்கிறோம் என்பதை வெளிப்படையாக சொன்னால் பிரச்சனை வராது.சுயநலம் எப்பொழுது உண்டாகிறது ,இயலாமையால் தான்.
அடுத்தது பொதுநலம்.இது இருப்பது போல் சுயநலமாகவும் இருப்பார்கள்,.தன்னம்பிக்கை எந்த மனிதனிடம் அதிகமாக உள்ளதோ அவனிடம் பொதுநலம் அதிகமாக காணப்படும்.
சமூதாயத்திற்கு செய்யப்படும் உதவியே பொதுநலம் என்று குறிப்பீடுவோம்.
சுயநலம் என்பது நம்முடனே பிறந்தது.இரத்தத்தோடு கூடியது.யாரும் சொல்லித்தரத்தேவையில்லை.யாரை பார்த்தும் கற்றுகொள்ளத்தேவையில்லை.ஆனால் பொதுநலமோ அப்படியில்லை.பிறரை பார்த்து வருவது.சொல்லி தெரிவது.உணர்வொஇஒடு கூடியது.மற்றவர்களுக்கு உதவி செய்வது பொதுநலம்தான்.இரத்ததானம்,கண் தானம்,மற்று உறுப்புகளை தானம் செய்வது இவையெல்லாம் பொதுநலமே!...
சுயநலம் என்பது ஒரு பெண் எனலாம் ,பொதுநலம் என்பது ஆண்கள் எனலாம்.ஆகவே பெண் இல்லையேல் ஆண் இல்லை.அதுபோல் சுயநலம் இல்லையேல் பொதுநலம் இல்லை.இப்படி இவ்விருநலங்களை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.
ஒரு எடுத்துக்காட்டாக காதலின் சின்னமாக இருக்கும் தாஜ்மஹால் சாஜஹானால் கட்டப்பட்டது என்று அனைவ்ருக்கும் தெரியும்.ஆனால் இது அவருடைய காதலியாகிய மும்தாஜிற்காக கட்டியது ஆகும்,இதை நாம் சுயநலம் என்று சொல்வோமா,இல்லை பொதுநலம் என்று சொல்வோமா.ஆனால் உற்று பார்த்தால் அதை சுயநலம் என்றுதான் சொல்லமுடியும்.அவர் அதை வடிவமைக்கும் போது இது
நம் வாழ்விற்கு பிறகு இந்திய நாட்டின் அதிசயமாக அமையும் என்று நினைக்கவில்லை.தன் காதலுக்காக எழுப்பட்ட ஒரு காவியமாகும்.ஆனால் இப்பொழுது அது அனைவரின் கண்ணுக்கும் ஒரு விருந்தாக உள்ளது.
ஆகவே நம்முடைய சுயநலம் பொதுநலம் கூடிய ஒன்றாகத்தான் இருக்கவேண்டும்.
நான்+நான்=சுயநலம்
நான் +நாம்=பொதுநலம்.

Thursday, September 18, 2008

பண்பாடு ,கலாச்சாரம் ,நாகரீகம்

கலாச்சாரம் என்பது ஆச்சாரமாக கொண்டு ஆக்கப்படும் கலையே கலாச்சாரம்.சிறந்த கலைகளை கொண்டு செய்யபட்டது கலாச்சாரம்.நாகரீகம் என்பது கலாச்சாரத்தை மையமாக வைத்து வந்தது ஆகும்.பண்பாடு என்பது இவ்விரண்டையும் சேர்த்து ஒரு கலவையாக கொண்டு பண்படுவது.எத்தனையோ பேர் பண்பாடு பற்றியும்,கலாச்சாரம் மற்ற்றும் நாகரீகம் பற்றியும் எழுதியிருப்பார்கள்,நானும் என்னுடைய கருத்துக்களை எழுதுகிறேன் படியுங்கள்.
இப்பொழுது உள்ள மனிதனுக்கு இந்த மூன்றும் உள்ளதா? என்பது என்னுடைய கேள்வி.அதற்கு பதில் என்னிடம் கொஞ்சம் உள்ளது.பண்பாடு என்பது இல்லை என்றே நான் சொல்லுவேன்,.கலாச்சாரமும் நாகரீகமும் நம் தேசத்தில் எங்கேயோ சென்று கொண்டிருக்கிறது.
நாகரீகம் என்ற பெயரில் பெண்கள் செய்யும் அட்டூழியங்கள் அளவில்லதாவை.சில பெண்களை நான் குறிப்பிட்டு சொல்கிறேன்.இந்த வரிகள் ஆண்களுக்கும் பொருந்தும்.
நாம் அணியும் உடையிலும் சரி நாம் வாழும் வாழ்க்கையுலும் சரி ,மற்றவர்களிடம் அணுகும் பழகும் முறையிலும் சரி ,நாகரீகம் என்பது இருக்கவேண்டும் ஆனால் கலாச்சாரத்தோடு கூடிய பண்பாடும் இருக்கிறது என்று எத்தனை பேர் பார்க்கிறோம்.
நல்ல நாகரீகத்தோடு வாழ்கிறோம் என்ற பெயரில் பண்பாடு காணாமல் போய்விடுகின்றது.
ஒரு ஆண் பெண்பார்க்க போனால் அவள் நல்லவளா நமக்கு ஏற்றவளா? என்று பார்ப்பதை விட அவள் நாகரீகம் தெரிந்தவளா நம்முடைய பழக்கத்திற்கு ஏத்தவளா? என்று பார்க்கிறார்கள்.நான் இதை தவறு சொல்லவில்லை ஆனால் முக்கியமானது வேண்டும் அல்லவா?
அண்டை நாட்டு பழக்கங்கள் நம்மை எவ்வளவு தூரம் கவர்ந்துள்ளது என்பது நம்மிடமே நாம் பார்க்கலாம்."பேஷன் ஷோ" என்ற பெயரில் நம்முடைய கலாச்சாரம் மற்றும் பண்பாடும் தெரிகிறது.இவர்கள் அணியும் ஆடைகள் நன்றாக உள்ளதா என்று சரிபார்ப்பதற்கு ஒரு கூட்டம் இருக்கும் மற்றும் மதிப்பெண்கள் போட ஒரு கூட்டம் இருக்கும் .ஆனால் இதை வெளியில் இருந்து சொன்னால் மேன்ர்ஸ் இல்லையா என்று நம்மையே கேள்வி கேட்பர்.நான் யாரை பற்றி சொல்கிறேன் என்று உங்களுக்கே தெரியும்.என்னடா பெண்கள் சுதந்திரம்,சாதனை என்று பேசிவிட்டு இப்பொழுது பெண்களை பற்றி குறை சொல்கிறேன் என்ரு நினைக்கவேண்டாம் ,நியாயம் என்று உள்ளதல்லவா?இங்கேயும் சில பெண்கள் என்றே குறிப்பிடுகிறேன்.
வெளிநாட்டு பழக்கவழக்கங்களை நம் நாட்டில் கொண்டுவந்து ஆடும் ஆட்டங்கள் அப்பப்பா!..
அந்த ஆட்டத்தில் படீத்தவர்கள் படிக்காதவர்கள் என்ற பாகுபாடு எல்லாம் கிடையாது.
நிறைய படித்தவர்கள் தான் "பப்" என்னும் ஒரு பெயரை வைத்து போடும் கும்மாளங்கள்...
இப்படி நாகரீகம் எல்லை மீறி போய்விட்டது..இப்படி எல்லை மீறுவதால் கலாச்சாரம் சீர்கெடுகிறது.பண்பாடு குறைகிறது.
தன் குழந்தைகள் "மாடர்ண்" ஆக இருக்கவேண்டும் என்பதற்காக பெற்றோர்கள் செய்யும் தவறுகள் நிறைய சொல்லலாம்.மற்ற பிள்ளைகளை விட தன் குழந்தை நல்ல அறிவாளியாக இரூக்கவேண்டும் என்ற எண்ணத்தை விட மாடர்னாக இருப்பதை விரும்புகிறார்கள்.
தன் குழந்தை ஆங்கிலத்தில் பேசினால் அவர்கள் படும் சந்தோஷம் எல்லையே இல்லை.
தமிழ் எங்கள் மூச்சு என்று வாதடுபவர்களின் குழந்தைகள் ஆங்கிலம் நிறைவாக உள்ளவர்களாக தான் இருப்பார்கள்.இதற்காக நான் தப்பு சொல்லவில்லை.நாகரீகம் வளர்ந்துவிட்டது.
முன்பெல்லாம் திருமணம் என்றால் பட்டு சேலை இருக்கும் இப்பொழுது "சல்வார்கமீஸ்",காக்ரா",சோலி" என்று உடைகளை விதவிதமாக அணிகின்றனர்.மாப்பிள்ளை சொன்னாலோ இல்லை கூடியிருப்பவர்கள் சொன்னால் தான் மணபெண் யாரென்று தெரியும்.இவர்களை சொல்லி தப்பில்லை,கலாச்சாரம் அப்படி உயர்ந்துவிட்டது
பெரியவர்களை கண்டால் அவர்கள் வணக்கம் சொல்வதுபோய்,இப்பொழுது வயது வரம்பு பார்க்காமல்"ஹாய்","ஹலோ" என்று சொல்கின்றனர்.இவர்களை குற்றம் சொல்லமுடியாது,ஏனென்றால் வணக்கம் சொன்னால் யார் திரும்புகிறார்கள்.
பண்பாடு அந்த அளவு உயர்ந்துவிட்டது.
நாட்டில் கலாச்சாரம், பண்பாடும் நன்றாக அமைய பாடுபடுவோம் என்று சொன்னால் அதை பின்பற்றுவது கஷ்டம்தான்.இருந்தாலும் முயற்சி செய்வோம்!...................

Wednesday, September 17, 2008

சமூகமும் நட்பும்

சமூகம் என்றால் என்ன?நாம் தான் சமூகம்.நட்பு என்றால் என்ன ?நாம் தான் நட்பும்.சமூதயத்தில் நட்பு எந்த அளவுக்கு இடம்பெறுகிறது என்பதுதான் கேள்வி.அதற்கு பதில் நானே சொல்கிறேன்.உண்மையாக நட்பை இப்பொழுதுள்ள சூழ்நிலையில் அவ்வளவு பொறுப்பாக கருதுவதில்லை.நண்பர்கள் என்று சொல்கிறோம் .எத்தனை பேர் உண்மையான நட்போடு பழகுகிறார்கள்.நண்பன் என்றோ தோழி என்றோ நுழைய வேண்டியது.பிறகு அவர்களின் பழகத்தில் நட்பு தென்படாது ,காதல் என்ன்னும் சொல்லே தென்படும்.இதனால் உண்மையான நட்பை கூட சந்தேகபடவேண்டிய சூழ்நிலை.
இந்த சமுதாயத்தில் நட்பை எந்த அளவுக்கு கொச்சை படுத்துகிறார்கள்,என்பது கொஞ்சம் கவலையான விஷயம்.
அனைவரும் நண்பர்களாக இருப்போம் என்று சொல்லவேண்டியது ஆனால் அதை தொடர்வது கொஞ்சம் கஷ்டமாக தெறிகிறது.நான் எல்லா நட்பையும் சொல்லவில்லை.
எனக்கு தெரிந்த ஒரு பெண் நட்பு என்னும் பெயரை வைத்துக்கொண்டு செய்த அட்டூழியங்கள் ,சொல்கிறேன் கேளுங்கள்.
தான் செய்யும் தவறுகளுக்கு நட்பை ஒரு மையமாகவும் வழிகோலாகவும் அமைத்து மற்றவர் கண்ணுக்கு அதை நியாமாக நிருப்பித்தது.அவனுடன் ஊர் சுற்றுவது ,பிறகு பீச் செல்வது ,சினிமா செல்வது ,யாரவது கேட்டால் என்னுடைய நண்பன் என்று சொல்லவேண்டியது.நட்பிற்கும் ஒரு எல்லை உண்டு அல்லவா?அது யாராக இருந்தாலும் ,ஆணோ பெண்ணோ.?தொலைபேசியில் நெடுநேரம் பேசுவது,பெற்றோர்கள் கேட்டால் என் நண்பன் என்று சொல்வது,இது தப்பித்து செல்ல கூடிய ஒரு எளிதான வழியாகும்."குரூப் டிஸ்கஷன்" என்ற பெயரில் கும்மாளம் அடிப்பது,இப்படி நிரைய சொல்லிகொண்டே பொகலாம்.
ஒரு பெண் ஒரு ஆண் நட்பு வைத்துக் கொண்டால் அதை தொடர்ந்து செல்வது மிகவும் கடினம்.எப்படியும் மனம் தடுமாறுகிறது.இப்படிதான் எனக்கு தெரிந்த இன்னொரு தொழியின் கதை.அவள் நெடுநாளாக ஒரு ஆணுடன் பழகியது,நட்பாக இல்லாமல் போனது,இது அவர்களின் நண்பர்களுக்கு தெரிய அதை மறுத்து தூய நட்பே எங்களுடையது,என்று வாதடினாள்,ஆனால் அந்த ஆணோ நாங்கள் நண்பர்கள் கிடையாது எங்களுக்குள் வேறு ஒன்று உள்ளது,என்று கூறினான்.
இதில் நான் சொல்லவருவது அவர்களுக்குள் என்னமோ இருக்கட்டும்,அதை பற்றி நான் கவலைபடவில்லை,ஆனால் நட்பு என்பது உண்மையான ,தூய்மையான ஒரு தெய்வீகமான ஒன்று,காதல் இல்லாமல் இருந்துவிடலாம் ,ஆனால் நட்பு இல்லாமல் இருக்கமுடியாது.அதை ஏன் கொச்சைப்படுத்துகிறீர்கள்?
இங்கு சொல்லபடும் ஒரு கவிதை நட்புக்கும் காதலுக்கும் பொருந்தும்.
"பார்த்தவுடன் பழகாதே
பழகியவுடன் இணையாதே
இணைந்தவுடன் பிரியாதே
பிரிந்தவுடன் வ்ருந்தாதே"

இந்த சமுதாயத்தில் நட்பு சில நேரத்தில் சந்தேகத்தை கொண்டுள்ளது.சிலபேர் செய்யும் தவறால் உண்மையான நட்புக்கு கூட மரியதை இல்லை.
மூன்று பேர் நண்பர்களாக இருந்தால் அதில் ஒருவன் தவறானவாக இருந்தால் அந்த ஒட்டு மொத்த நண்பர்களையும் தவறாக சொல்வது இந்த சமூதயத்தின் வேலை.
"உன் நண்பனை பற்றி சொல் உன்னை பற்றி சொல்கிறேன்" என்று சொன்னால்,யாரும் நண்பனாக இருக்கமுடியாது ,நல்லவர்கள் மட்டும் நண்பர்களாகி விட்டால் ,தவறான வழியில் செல்பவர்களை யார் வழிநடத்துவது.
கெட்டவர்கள் இருந்தால் அந்த நட்பு கெட்ட நட்பும் .நல்லவர்கள் இருந்தால் அது நல்ல நட்பும் என்றும் சொல்வது வேடிக்கையான விஷயம்.
ஒரு நண்பர்கள் கூட்டத்தில் ஒரு கெட்டவன் இருந்தால் அவனை ஒழுங்குபடுத்துவது ஒரு உண்மையான தோழனின் கடமை.
"மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்"அதுபோல் ஒரு நல்ல நட்பு ,அதை வைத்து நல்ல சமூகம் அமைவதும் இறைவனின் செயலே!
ஒரு சமூதாயத்தில் ஒரூவன் நல்ல நிலையில் இருக்கவேண்டும் என்றாலோ இல்லை அவன் ஒரு நல்ல மனிதனாக இருக்க வேண்டுமென்றாலோ ,பெற்றோர் அல்லது நண்பர்கள் நல்லவர்களாக அமைய வேண்டும்.
நாம் நன்றாக இருந்தால் சமூதாயம் நன்றாக இருக்கும்.அதுபோல் தான் நட்பும்,நாம் ஒவ்வருவரும் நன்றாக இருந்தால் நட்போடுகூடிய சமூகமும் நல்லதாக இருக்கும்.

கடைசியாக நான் ஒன்று சொல்லிகொள்கிறேன்,தயவு செய்து நட்பு என்னும் பெயரை வைத்துக் கொண்டு உங்கள் தவறான செயல்களுக்கு,அதை ஒரு விளையாட்டு பொருளாக பயன்படுத்தாதீர்கள்.அது போல் இந்த சமூதாயத்திற்கு,ஒரு ஆண் பெண் பழகுவதை தவறான கண்ணோட்டத்தை பார்க்காதீர்கள்.சமூதாயம் என்பது நாம் தான் .ஆதலால் நம்முடைய கண்கள் ஒழுங்கான பாதையில் செல்லவேண்டும்.எண்ணங்கள் தூய்மையாக இருக்கும்.
நாம்+நட்பு=சமூகம்

Monday, September 15, 2008

உறவுகள்

உறவுகள் என்பது மிகுந்த சிறப்புமிக்க ஒன்றாகும்.இதை எத்தனைபேர் மதிக்கிறார்கள்?என்றால் குறைவே!................நிறைய உறவுகள் ,அக்கா தங்கை,அண்ணன் தம்பி,கணவன் ,மனைவி,மாமியார் ,மாமனார்,மற்றும் சொல்லிக்கொண்டே போகலாம்.
உறவுக்கு மரியாதை என்பது இந்த நூற்றாண்டில் கிடையாது.உறவுகள் என்பது புனிதமானது.

உணர்வுகளின் மதிப்பை கொண்டே உறவுகள் மேம்படுகிறது.ஆனால் உணர்வுகளுக்கு மதிப்பிலாததால் உறவுகளுக்கும் மதிப்பில்லை.பணமே வாழ்க்கை என்ற நிலை வந்ததால் உறவுகள் விலகிகொண்டே செல்கிறது.
எத்தனை பேர் உறவுகளுக்கு மதிப்பை தருகிறார்கள் என்றால் சுலபமாக எண்ணிவிடலாம்.அவ்வளவு இடைவெளிகள்.இப்பொழுது கணவன் மனைவி உறவே சற்று தொலைவாகத்தான் உள்ளது.தான் கற்ற கல்வி வீணாகாமல் இருப்பதற்கு அமைந்த வேலைகளை வைத்து கணவன் ஒருபுறமும் மனைவி ஒருபுறமும் உள்ளனர்.
இதை இப்பொழுது உள்ளவர்களிடம் கேட்டால் உறவுகளை வைத்து என்னசெய்வது ,வாழ்க்கை நடத்துவதற்க்கு உறவுகள் வேண்டுமென்றாலும் பணம் என்பது மிகவும் முக்கியமானது ஆகும்.என்பதே பதில்.
இப்பொழுது உள்ள காலக்கட்டத்தில் உறவுகளில் சுயநலமே அதிகமாக உள்ளது.
இப்பொழுது உள்ள உறவுகளில் ஒன்றுமில்லை என்றே சொல்லலாம்.
பெற்றோர்களை எடுத்துக்கொண்டால் தங்கள் குழந்தைகள் நலனிற்காக எவ்வளவு தொலைவானாலும் அவர்களை கல்விக்காக அனுப்பிவைக்கிறார்கள்,இங்கே அவர்கள் தங்கள் குழந்தைகளிடம் பகிர்ந்து கொள்ளும் நேரங்களை இழந்தாலும் அவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இதையெல்லாம் விட்டுகொடுக்கிறார்கள்.

இப்படி சில காரணத்திர்காக உறவுகள் தொலைவில் இருப்பதை சொல்லலாம்.அடுத்தது உறவுகளில் உள்ள நம்பிக்கை.எத்தனை பேர் உறவுகளில் நம்பிக்கை வைத்துள்ளனர்.சொல்லமுடியாத ஒன்று,அவர்களை குற்றம் சொல்லமுடியாது,ஏனென்றால் நாடு போகும் நிலைமை அப்படி.சந்தேகம் நிறைந்த உறவாகவே உள்ளது.
தூரமாகிப்போகும் உறவுகள் சந்தேகப்படும் உறவுகள் இவைகளால் மனிதன் மேல் உள்ள மதிப்பை இழந்துவிடுகிறது.பணமோசடி போல் உறவு மோசடி நிறைய நடக்கிறது.
கலாச்சார கேடால் உறவுகள் சீரழிகிறது,துரொகங்கள் தலை தூக்குகின்றன.
அதைவிட கொடுமையான விஷயம் உறவை தவறான செயலுக்காக பயன்படுத்தும் சிலபேர்.அண்ணன் உறவுக்கும்,தங்கை உறவுக்கும்,அண்ணி உறவுக்கும் மற்றும் எத்தனையோ மதிக்கப்படும் உறவுக்கும் நடக்கும் கேடான விஷயங்கள் அனைவரும் அறிவோம்.இந்த நிலை மாறுவது எளிதானதா? இல்லை கடினமானதா என்பது என்னுடைய கேள்வி?
எந்த உறவுகள் மீதும் நம்பிக்கை வைக்கமுடியாமல் திண்டாடுகின்றனர்.
என்னைபொருத்தவரை உறவுகள் என்பது பசுதோல் போர்த்திய புலியாகவே தெரிகிறது.
மனிதர்கள் மனிதர்களாக மாறினால்தான் உறவுகள் உறவுகளாக தெரியும்.அப்பொழுதுதான் உறவுக்கு உண்டான மரியாதை பெருகும்,உறவை ஒரு சொல்லாக வைத்து செய்யும் அட்டூழியங்கள் அழியும்.
உணர்வோடு கூடிய உறவுகளை மேம்படுத்த அனைவரும் பாடுபடுவோம்.உறவை மதிப்போம்!..

Saturday, September 13, 2008

பெண்களின் சாதனை

அவர்களுக்கு வந்த சோதனைகள் நமக்கு தெரிந்தனவே,அதையெல்லாம் எதிர்த்து துனிந்து போராடியதும் தெரிந்தனவே,ஆணுக்கு நிகர் பெண் என்பதை சாதித்தவர்.
இப்படி பெண்கள் சாதித்தது பல உள்ளன,
பெண்கள் எத்தனை சாதனை புரிந்தாலும் ,எவ்வளவு புத்திசாலியாக இருந்தாலும்,அழகான பெண்களையே நிரைய பேர் எதிர்பார்க்கிறார்கள்.ஆகவே அதிலும் நாங்கள் தாழ்ந்தவர்கள் இல்லை என்று நிருப்பித்துள்ளனர். பெண்களுக்கு
அடுக்களைதான் உலகம் ,என்று நினைத்த எண்ணங்கள் இப்பொழுது தவிடு பொடியாகி விட்டன,
இவர்களின் சாதனையில் வயது வரம்பு கிடையாது.அதற்கு எடுத்துக்காட்டாக ஒரு 59வயதுடையவர் உயரம் தாண்டிதலில் சாதனை படைத்துள்ளார்.
இன்னும் ஊக்குவிக்காத பெண்கள் எத்தனையோ பேர் உள்ளனர்.தனது திரமை என்னவென்றே தெரியாமல் இருப்பவர்களும் உண்டு.
முடங்கிக்கடந்தது அந்த காலம்.ஆனல் இப்பொழுது விட்டுவைக்காத துறை இல்லை என்றே சொல்லலாம்.
தனக்கு தெரியாதது எதுவும் இந்த உலகில் இருக்ககூடாது பாடுப்டும் பெண்களே உள்ளனர்.பெருமையாக உள்ளது.இன்னும் பெண்கள் உள்ளனர்.அவர்கள் எல்லாம் வெளிவரவேண்டும்.

Saturday, September 06, 2008

பெண்கள் சுதந்திரம்!........?

பெண்கள் சுதந்திரம் என்றால் என்ன?எத்தனை பெண்கள் முழு சுதந்திரம் அடைந்துள்ளார்கள் சொல்லுங்கள் பார்க்கலாம்.இந்த மண்ணில் எத்தனையோ குழந்தைகள் பிறக்கிறார்கள்,எத்தனையோ குழந்தைகள் இறக்கிறார்கள்,நம்மால் சொல்லமுடியாதவை.ஆனால் தெரிந்தது ,ஒரு குழந்தை பிறக்கும் போது ஆயிரம் குழந்தைகள் இற்க்கின்றன.இது அனைவருக்கும் தெரிந்ததே!..
ம்ம்..
பெண்களுக்கு முழு சுதந்திரம் கிடைத்ததா என்றால்,என்னால் இதற்கு பதில் சொல்லத்தெரியவில்லை.ஏனென்றால்,இரண்டு கெட்டான் நிலையில் உள்ளது என்றுதான் சொல்லுவேன்.
எத்தைனையோ புலவர்கள் தன்னுடைய கவிதைகளின் மூலமும் பாட்டின் மூலமும் கூறியுள்ளார்கள்.

ஒரு பெண் எப்படி இருக்கவேண்டும் என்றும் அவளுக்கு கல்வி எவ்வளவு முக்கியம் என்றும் தங்களது பாட்டின் மூலம் தெரிவித்துள்ளனர்.ஆனால் இப்பொழுது கல்வி விசயத்தில் பெண்களை மீற யாரும் இல்லை என்றே சொல்லலாம்.

சரி,ஒரு பெண் எப்பொழுது பெண்ணாகிறாள்,என்பது அனைவருக்கும் தெரிந்ததே,இருந்தாலும் நான் சொல்ல வேண்டியது,
ஒரு பெண் பிறக்கும் போது 25 மதிபெண்களை பெறுகிறாள்,பிறகு பெறியவளாகும் பொழுது 25ம்,கல்யாணம் செய்து மனைவி என்னும் ஸ்தானத்தை அடையும் பொழுது 25ம்,பிறகு குழந்தை பெற்று தாய் ஸ்தானத்தை அடையும் பொழுது 25ம் பெறுகிறாள்,இதில் 100 மதிப்பெண்கள்,பெற்றாலும் அவள் இதை அடைவதற்கு பெற்ற துன்பங்கள்,அளவில் இல்லாதவை,ஆனால் அவளுடைய துன்பங்கள்,தொடரும்,
நாம் எத்தனையோ காலங்களை கடந்துவிட்டோம்,எத்தனையோ விஷயங்கள் மாறிவிட்டன,அந்த காலத்தில் உள்ள பெண்களைவிட ,இந்த காலத்தில் உள்ளவர்கள்,ஐயோ!சொல்லவே வேண்டாம்,

ஆனால் இவர்கள் எவ்வளவு உயர்ந்தாலும் ,துன்பம் என்பது தொடர்ந்துகொண்டே இருக்கிறது,ஒரு பெண் பிறந்த உடன் தாய் தந்தையறிடம் வளர்கிறாள்,எத்தனை பெற்றோர்கள்,பெண்களின் இஷ்டபடி போகவிடுகிறார்கள், எண்ணி பார்த்தால் அதிகமாக இல்லை,
அவள் கல்வி கற்கும் விஷயத்தில் இருந்து அவள் வாழ்க்கை விஷயம் வரை பெற்றோரே,
இது எல்லா பெண்களுக்கும் பொருந்தும் என்று சொல்லமுடியாது.
சில பெண்களுக்கு கிடைக்கும் சுதந்திரத்தை வேறு வழியில் பயன்படுத்துகிறார்கள்,அவர்களை பற்றி பேசவில்லை,ஆனால் எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்காதா என்று ஏங்கிக்கொண்டிருக்கும் பெண்களை பற்றி பேசுகிறேன்.
சில வீடுகளில் பெண்கள் கல்வி முடிப்பது என்றால் அது ஒரு பெரிய விஷயம்.அவர்களுடைய எண்ணங்கள் எல்லாம் ஒரு கனவு.சரி நம் உணர்வுகளை நம் பெற்றோர்கள் தான் புரியவில்லை நமக்கு வாய்ப்பவர் புரிந்து கொள்வார்,என்று மனதை அமைதிப்டுத்திக்கொண்டு வாழும் எத்தனையோ பேர்,
நமது வாழ்க்கையை நன்றாக தீர்மானிப்பார்கள் என்று பெற்றோரிடம் ஒப்படைத்து விட்டு ,பெருமூச்சினை விடும் பெண்கள்,திருமணம் ஆன பிறகு பெருமூச்சு விடக்கூட நேரம் இல்லாமல் தவிக்கின்றனர்,சில பெண்கள்.

இப்படி பெண்கள் சுதந்திரத்தை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.இன்னும் சில இடங்களில் சில பெண்களுக்கு உண்மையான சுதந்திரம் கிடைக்கவில்லை என்றே நான் சொல்லுவேன்.
அவர்களுக்கு தங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய உரிமை இல்லை என்றே சொல்லலாம்.
நிறைய இடத்தில் அடுப்புகள் வெடிக்கின்றன,
இன்னும் எத்தனை பாரதியார் வந்தாலும் ,சிலரை மாற்றுவது கஷ்டம் தான்.
பெண்களுக்கு முழு சுதந்திரம் கிடைத்ததா என்றால் என்னுடைய பதில் ............................?

Friday, February 15, 2008

ஹிலாரியை வெல்வது யார்?

இப்போது தேர்தல் சீசன். அதுவும் அமெரிக்க தேர்தல். இந்த தேர்தலின் முடிவால் உலகில் பல மாற்றங்கள் நிகழக் கூடும். இந்த தேர்தல் ஜுரம் சாப்ட்வேர் விளையாட்டு தளங்களையும் விட்டு வைக்கவில்லை. தங்கள் அபிமான வேட்பாளரை வெற்றி பெறச் செய்வதற்கு ஏதுவாக ஒரு விளையாட்டையும் உருவாக்கி இருக்கிறார்கள். நீங்களும் முயற்சி செய்து பாருங்களேன்

Thursday, January 25, 2007

ஓ மனிதா!

வாழ்விலே இன்பமும் துன்பமும் வரும்
இன்பம் பாதி துன்பம் பாதி என்று வராமல்
இரண்டில் எது வேண்டுமானாலும் வரும்
ஓ' மனிதா
எது வந்தாலும் அதை எதிர்த்து நில்
உன் மனதைரியம் உனக்கு மாலையிடும்
உன் துணிச்சல் நீ போகும் இடம் பூமாலை தூவும்
உன் தன்னம்பிக்கை உன்னுடன் வெற்றி நடை போடும்
உன் மகிழ்ச்சி உன்னை வாயாற வாழ்த்தும்
உனது வெற்றி உன்னை போற்றும்.

Sunday, October 08, 2006

குழந்தைகள் வளர்ப்பு

குழந்தைகள் என்றாலே அனைவருக்கும் சந்தோஷம் தான் வரும்.அவர்கள் செய்யும் சின்ன சேட்டைகள் கூட சந்தோஷத்தை கொடுக்கும்.அந்த காலத்தில் குழந்தைகளை பெத்தோமா அவர்களை வள்ர்த்தோமா நல்ல ஒரு வாழ்க்கை அமைத்துக்கொடுத்தோமா என்று நினைப்பர்.ஆனால் இப்பொழுது ஒரு குழந்தை இருந்தாலும் அதற்கு தெரியாதது ஒன்றும் இருக்ககூடாது என்று நினைக்கின்றனர்.முன்னுள்ள காலத்தில் பிள்ளைகளை படிக்க வைக்கிறோமோ இல்லையோ அவர்களுக்கு நிறைய சம்பாதித்து சொத்துக்கள் நிறைய வவத்து விட்டு போய்விடுவார்கள்.அதற்கு சண்டை போட்டுக்கொண்டு கூடபிறந்த எண்ணம் கூட இல்லாமல் உறவு முரிந்துவிடும்.
ஆனால் இப்பொழுது ஒன்றோ இரண்டோ மூன்றோ இருந்தாலும் அதற்கு சேர்த்து வைக்கிறார்களோ இல்லையோ அவர்களுக்கு எல்லாவிதமான கலைகளை கத்துக்கொடுத்துவிடுகின்றனர்.அதனால் பெற்றோர்களை எதிர்பார்ப்பதை குறைத்துகொள்கின்றனர்.இதானால் காலாகாலதிற்கு சொந்தங்கள் நிலைத்திற்கும்.
சரி இப்பொழுது குழந்தைகள் வளர்ப்பு பற்றி பார்ப்போம்.
உணவு முறை;யாரை கேட்டாலும் என்பிள்ளை சாப்பிடமாட்டேங்கிறா.இது அனைவருக்கும் நடக்கும் பிரச்சினை.இதற்கு எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்.இப்பசொல்லபோறது சில பேருக்கு தெரிந்திருக்கலாம் தெரியாமலும் இருக்கலாம்.தெரியாமல் இருந்தால் தெரிந்துக்கொள்ளுங்கள்.தெரிந்திருந்தால் எனக்கு சொல்லுங்கள். முதலில் சாப்பாட்டில் வற்புறுத்துவது நல்லதல்ல.அவர்கலின் எண்ணம் வாக்கில் விடவெண்டும் என்று சொல்வர்.ஆனால் நான் சொல்வது எதையும் வித்தியாசமாக செய்து கொடுங்கள்.குழந்தைகள் விரும்புவர்... . .உடைகளில் வண்ணத்தை தேர்ந்தெடுத்து கொடுப்பது போல் உணவிலும் வண்ணம் சேருங்கள்.
பொதுவாக மாவு பொருட்களில் எடுத்து கொள்வோம்.
இட்லியை வெறுமையாக செய்துகொடுத்தால் சில குட்டீஸ்கலுக்கு பிடிக்கும்;பிடிக்காமலும் இருக்கும்.ஆனால் நான் சொல்வது சிலருக்கு தெரிந்திருக்கலாம்.தெரியாதவ்ர்களுக்கு இட்லியில் சில காய்ந்த திராட்சை மற்றும் சில வண்ண ம் கலந்த பழங்களை சேர்த்து செய்து கொடுத்தால் அவர்கள் விரும்புவர்.
இனிப்பு விரும்புவர்களுக்கு தோசை ஊற்றும் பொழுது அதில் கொஞ்சம் சக்கரை தூவி செய்து கொடுத்தால் விரும்புவர்.
சப்பாத்தி செய்துகொடுக்கும் பொழுது அதில் கொஞ்சம் இனிப்புடன்பிசைந்து செய்து கொடுத்தால் நல்லது.வண்ணம் விரும்பினால் அதில் பழங்களை சேர்த்துக்கொள்ளலாம் .வாழைப்பழங்கள் விரும்பாதவர்களுக்கு சப்பாத்தி மாவில் இந்த பழங்களை சேர்த்து பிசைந்து சுட்டுக்கொடுத்தால் நல்லது. இதை செய்து பாருங்கள்.
உணவு முறைகளில் கொஞ்சம் வித்தியாசமாகவும்
சத்துள்ளதாகவும் செய்து கொடுத்தால் நல்லது.
இப்பொழுது ;ஒரு சின்ன வைத்திய முறை.
குழந்தைகளுக்கு வயிற்றில் புளிப்பு ஏற்பட்டால் அல்லது
பசியில்லாமல் இருந்தாலோ கொஞ்சம் இஞ்சியுடன் பூண்டை சேர்த்துஅரைத்து சார் எடுத்து அதனுடன் தேன் சேர்த்து கொடுத்தால் நல்லது.முதன் முறையாக கொடுக்கும் பொழுது கொஞ்சமாக இஞ்சி செர்த்து கொடுக்க வேண்டும்.ஒரு வயதுக்கு உள் உள்ள குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம்.இதை நான் பின்பற்றுவதால் உங்களுக்கு சொல்லியுள்ளேன்.

Monday, September 11, 2006

கணவன் -மனைவி

என்ன உறவையே வைத்து எழுதுகிறேனே என்று நினைக்கவேண்டாம்.இப்ப உள்ள கலி காலத்தில் இந்த உறவுக்கு மதிப்பு என்பது குறைந்து கொண்டே வருகிறது.
எல்லா உறவை விட இந்த உறவு மிகவும் முக்கியமானது மற்றும் வலிமையானதும் கூட.ஏனென்றால் இந்த உறவு எந்த இரத்த பந்தமும் இல்லாமல் நம்பிக்கையில் உண்டாவது.இதை புரிந்து கொண்டு வாழ்பவரும் உண்டு, புரியாமல் பிரிந்தவரும் உண்டு.
''கணவனே கண் கண்ட தெய்வம்'' மற்றும் ''கல்லானாலும் கணவன் ;புல்லானாலும் புருசன்'' என்று சொல்வர்.ஆனால் இப்பொழுது இது எல்லாம் கணவில் தான் காண முடிகிறது.
திருமண வாழ்கை என்பது இரு மணமும் இணைவது.அந்த காலத்தில் என்ன நேர்ந்தாலும் கணவனையே கடைசி வரை என்று நினனத்தனர்.இப்ப கணவனின் நடவடிக்கை பிடிக்கவில்லையா அல்லது தனக்கு ஒத்து வரவில்லையா உடனே விவாகரத்து.
குடிக்கும் புருசனை விரும்பாத பெண்கள் இப்பொழுது குடிக்க தெரியுமா ஸ்டைலா இருக்கதெரியுமாஎன்ற முழு விவரம் தெரிந்துதான் கல்யாணம் செய்கின்றனர்.ஆண்கள் மட்டும் என்ன குறைந்தவர்களா என்ன?அவர்களும் இடும் மதிபெண்கள் ,கண்டிஷன்கள் கேட்கவா வேணும்?
எடுத்துகாட்டுக்கு கலர்,கலராத்தான் பொண்ணு வேணும் ,மாடர்ன வேணும் ,ஸ்டைலா வேணும் கேட்பாங்க.ஆனா தான் எப்படி இருக்கோம் பார்க்க மாட்டாங்க.இதே மாதிரி பெண்களும் கணக்கு போட்டாங்கன்னா அப்புறம் திருமணம் என்கிற சொல்லை காகிதத்தில்தான் பார்க்கவேண்டும்.
கணவன் -மனைவி என்பது வண்டியும் அச்சானியும் போல்.இதில் ஒன்று சரியில்லைஎன்றாலும் வண்டி பயன்படாது.அது போல் தான் வாழ்க்கையும்.
மனம் ஒத்து வாழ்ந்தாலே; வண்ணம் தேவைபடாது அழகு தேவைபடாது.
கணவன் மனைவி உறவு பெரிதும் சரியில்லாமல் போவதற்கு காரணங்கள்
கணவன் தன்னை ஒரு பெரிய ஆளாக நினைத்துக்கொள்வது.மனைவின் எண்ணங்களை மதிக்காதது,தன்னை விட கீழே வைத்து பார்ப்பது.தன் பேச்சிற்கோ அல்லது எண்ணங்களுக்கு மதிப்பு கொடுத்து அவர்களின் எண்ணங்களை குழி தோண்டி புதைப்பது.
மனனவி மட்டும் என்ன குறைச்சலா.கணவன் வாங்கிதரும் எந்த பொருளையும் வைத்து நிறைவு காணாதது.புரிந்துக்கொள்ளாமல் போவது.இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.
கணவன் மனைவி எப்படி ஒத்துபோவது.
எந்த முடிவு எடுத்தாலும் இரண்டு பேர் சேர்ந்து எடுக்கவேண்டும்.
மனைவியை இழிவுபடுத்தி பேசுவது தவிர்க்க வேண்டும்
அவரவர் உணர்வுகளுக்கும் ,உரிமைக்கும் மரியாதை கொடுக்கவேண்டும்.
எது செய்யலாம் எது செய்யவேண்டாம் என்பது தெரிந்து நடந்தாலே அமைதியான சந்தோஷமான வாழ்க்கை வாழலாம்.

Wednesday, September 06, 2006

மாமியார்-மருமகள்

இந்த தலைப்பை பார்த்தால் வித்தியாசமாக தோன்றும்.இந்த உறவு எப்படிப்பட்ட உறவு என்பது யாராலும் உணர முடியாது.ஏன் என்னாலும் தான்.இன்றும் இந்த உறவு விசமமானது மற்றும் ஆபத்தானது என்று தான் அனைவரின் எண்ணத்திலும் உள்ளது.
ஆனால் இதை நல்ல முறையில் கையாண்டால் நம் புவியில் மண்ணெண்ணை, கேஸ் அடுப்பு இதெல்லாம் வெடிக்காது.
மருமகள் என்பவள் இன்னொரு மகள் என்பதை இன்னும் எந்த மாமியாரும் உணரவில்லை.மாமியார் இன்னொரு தாயாக இல்லாவிட்டாலும் குறைந்த பட்சத்தில் தாய் ஸ்தானத்தில் வைத்து பார்ப்பது கிடையாது.
எங்கேயாவது மாமியாரும் மருமளும் ஒற்றுமையாக உள்ளார்கள் என்று கேள்விபட்டதுண்டா?
எங்கு பார்த்தாலும் சண்டைகள்.இந்த சண்டையில் யார் தலை உருளும் தெரியுமா?அந்த வீட்டின் தலைவர் அதாவது மாமனார்,மற்றும் ஒரு நபர்.மிகவும் முக்கியமானவர்.அந்த மாமியாரின் மகன் மருமகளின் கணவர்.இவரின் நிலைமை மிகவும் மோசமாகத்தான் இருக்கும்.யார் பக்கம் பேசுவது என்பது தெரியாது.சில நேரத்தில் பச்சோந்தியாக மாறவும் வாய்ப்பு இருக்கிறது.
சின்ன சின்ன சண்டை போட்டாலும் மற்ற இடத்தில் இவர்கள் விட்டுகொடுக்கமாட்டார்கள்.(சில மாமியார்-மருமகள்).
இதை தீர்ப்பதற்கு எவ்வளவு பெரிய சீமான்கள் தலைவர்கள் வந்தாலும் தீராது.
ஆனால் என்னால் முடிந்தவரை சொல்லும் தீர்வு.
மாமியார்கள் தாங்கள் மருமகளாக இருந்த நாட்களை நினைத்து பார்க்கவேண்டும்.அது போல் மருமகள் தாங்கள் மாமியாராக போகும் காலத்தை நினைத்துப்பார்க்க வேண்டும். இது போல் நடந்தால் இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு இருக்கும் என்பது என்னுடைய நம்பிக்கை.

Monday, September 04, 2006

தாய்

தாய் இந்த வார்த்தையை பார்த்தாலோ கேட்டாலோ நம் உள்ளத்தில் ஒரு புது வகையான மாற்றம் நிகழும்.இது நீங்கள் உணர்ந்து இருக்கிறீர்களோ இல்லையோ எனக்கு ஒரு மாற்றம் நிகழும்.தாய் என்பவள் கடவுளுக்கு முதற்படியாக உள்ளாள்.இது அனைவருக்கும் அறிந்தவையே.
தாய் ,நல்ல ஒரு தாய் கிடைப்பது அவரவர் செய்த புண்ணியமாக இருக்கும்.எதையும் எதிர்ப்பார்க்காமல் நமக்கு நல்லது செய்வது தாய் தான்.ஒரு உயிரை பெற்று அதை நல்லபடியாக வளர்த்து அதற்கு நல்ல ஒரு வாழ்க்கையை அமைத்து தருவது ஒரு தாயின் கடமை.
ஆனால் இந்த கடமையை தவறி நடப்பவர்களும் உள்ளனர்.அவர்களை பற்றி பேசவிரும்பவில்லை.
" தாயை போல் பிள்ளை;நூலை போல் சேலை"
அந்த காலத்தில் பெண் பார்க்கப்போகும் போது பெண்ணின் குணத்தை விட அந்த தாயின் குனதை வைத்து தான் முடிவு எடுப்பார்கள்.ஆனால் இப்பொழுது இது சாத்தியமா என்பது என்க்கு தெரியாது.
அன்பின் மறு வடிவம் தாய் என்றும் அறிவின் மறு வடிவம் தந்தை என்றும் சொல்வர்.எதை வேண்டுமானாலும் விலைக்கு வாங்கலாம்,ஆனால் தாயின் அன்பை மட்டும் எவராலும் விலைக்கு வாங்க முடியாது.
அந்த கால்த்தில் என்ன துன்பம் வந்தாலும் தன் பிள்ளை தன்னுடன் இருக்கவேண்டும் என்று வளர்ப்பாள்.ஆனால் இப்பொழுது பிள்ளைகளை சுமையாக நினைக்கும் சில தாயும் உள்ளனர்.
நீங்கள் நினைகளாம் தாயை புகழ்ந்துவிட்டு இப்பொழுது இப்படி எழுதுகிறேன் என்று.
சில தாய் என்ற பெயரில் பேய்களாக நடப்பவர்களும்,உள்ளனர்.குழந்தைகளை பெற்று அதை வளர்க்க போதிய வசதி இல்லாமல் அனாதை ஆசிரமத்தில் விடுவதும் ,குப்பைத்தொட்டிலில் போடுவதும் ,அரசுதோட்டிலில் போடுவதும்,பெண்ணாக பிறந்தால் சிசு கொலை செய்வதும் நம் நாட்டில் அதிகமாகி விட்டது.அரசு தொட்டில் வைத்ததும் வைத்தார்கள்,குழந்தைகள் பெறுகிவிட்டன.
அது மட்டுமா; குழந்தயை எங்கோ சென்று கரு உண்டாகி அதை கழிவறையில் பெத்து [போடுவதும் அதிகமாகி விட்டது.காக்கும் தாய் என்பவள் சென்று இப்பொழுது அழிக்கும் தாய் உருவாகி கொண்டிருக்கிறது.தாயை குற்றம் சாட்டி பேசுவாதாக யாரும் நினைக்கவேண்டாம்.
ஒரு பெண்ணை ஏன் இந்த நாடு மதிக்கிறது.அவள் ஒரு உயிரை ஈன்று தறுவதால்.அவளை கடவுளின் ஸ்தானத்திற்கு மேலாக தான் அனைவரும் வைத்துள்ளனர்.நம் நாட்டை கூட ஒரு பெண்ணிற்கு சமமாகத்தான் வைத்து புகழ்கின்றனர்.அப்படி உள்ளவள்,இந்த கொடுமையை செய்கிறாள் என்றால் நம்மால் பொறுக்க முடியாது.
நாகரீகம் வளர வளர நாடு போகும் நிலைமையைவிட தாய் என்ற சொல்லுக்கு என்ன கேடு வருமோ.ஆனால் நல்ல உள்ளம் படைத்த தாய்மார்களால் கொஞ்சம் காப்பாற்றபடும்.

Friday, September 01, 2006

தற்கொலை முயற்சி

மனிதன் வாழ்வில் மிகுதியாக வலம் வருவது கோபம் ஒன்று, மற்றொன்று தற்கொலை முயற்சி.இதை பற்றி ஏன் நான் பேச விரும்புகிறேன் என்றால்,மிகுதியாக கேள்விப்பட்டது என் வாழ்வில் இது தான்.
ஆகவே இதைப்பற்றி சில வார்த்தைகள் உங்களுடன் பகிர்ந்து கொள்ளவிரும்புகிறேன்.
மனிதன் எதில் முயற்சி செய்கிறானோ இல்லையோ ,எதில் தைரியம் வருகிறதோ இல்லையோ இந்த தற்கொலை முயர்சியில் மட்டும் விரைவாக தைரியம் வ்ருகிறது மற்றும் மிகுதியாக முயற்சி செய்கிறான்.இதில் எடுக்கும் முயற்சியை அவன் எதில் தோல்வி அடைந்தானோ அதில் எடுத்தால் வாழ்வில் வெற்றி பெறுவான்.மரணத்தை நம்பும் மனிதன் வாழும் வாழ்க்கையை நம்புவதில்லை.இது முட்டாள்தனமானது என்பது தெரிந்தும் இந்த தவறை செய்கிறான்.தற்கொலையில் மட்டும் நிம்மதியாகவா உயிரை விடுகிறார்கள்?.
அந்த நிமிடத்தில் தன்னை யாராவது காப்பாற்றுவார்களா என்று அந்த உயிர் தேடும்.நாம் செய்தது தவறு என்பது அப்பொழுது தான் தெரியும்.
கடவுள் தந்த உயிர் நமக்கு வாழ மட்டும் உரிமை உள்ளது,அதை அழிப்பதற்கோ அல்லது காயப்படுத்துவதற்கோ நமக்கு எந்த உரிமையும் இல்லை.
இது எனக்கு எப்படி தெரியும் என்றால் மற்றவர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன்.
வாழ்வில் வரும் இன்னல்களை சமாளிக்கமுடியாமல் இந்த முடிவை மேற்கொள்கின்றனர்.
ஆகவே அனைவருக்கும் சொல்வது எது வ்ந்தலும் சமாளிப்பது நல்லது.மேலும் இந்த முடிவை பெரிதும் எடுப்பவர்கள் படித்தவர்களே.எனக்கு தெரிந்த தோழியின் தாயும் இந்த முடிவை மேற்கொண்டவர்களே.அவர்கள் அலறிய ஒலியை என் தோழி சொல்ல கேட்டிருக்கிறேன்.

Thursday, August 24, 2006

கோபம்

மனிதனின் மிகப்பெரிய எதிரி யார் என்று கேட்டால் அனைவரின் பதில் என்னவாக இருக்கும் தெரியுமா?அவரவர் வாழ்க்கையில் வந்துபோகும் மனிதர்களை பற்றிதான் சொல்வார்கள்.ஆனால் என்னுடைய பதில் என்ன தெரியுமா.கோபம்
இந்த கோபம் என்ற வார்த்தை மூன்று எழுத்தாகத் தான் தெரியும்.ஆனால் இதனால் எத்தனை மனிதர்கள் கொலைக்காரனாகவும்,மிருகங்களாகவும்,எதிரியாகவும் மாறியிருக்கார்கள்,தெரியுமா?
கோபம் வந்தால் நாம் என்ன செய்கிறோம் என்பது நமக்கே தெரியாது.ஆனால் இது தவறு.கோபம் நமக்கு அடிமையாக வேண்டுமே தவிர அதற்கு நாம் அடிமையாக கூடாது.கோபம் என்ர மிருகத்தை எப்படி நமக்குள் கொண்டுவருவது,என்பதை எனக்கு தெரிந்தவரை சொல்கிறேன்.
கோபம் வந்தால் நம் மனதிற்குள்ளே நாம் 1முதல் 10 வரை எண்ணிக்கொள்ளலாம்,அல்லது அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடலாம்,அல்லது தனியாக சென்று அவர்களை மனதிற்குள்ளோ,வெளிபடையாகவோ அவர்கள்ககதில் விழாமல் திட்டிக்கொள்ளளாம்.இதையும் நம் கோபம் தணியவில்லை என்றால் அவர்களின் புகைப்படத்தை நம் முன் வைத்துக்கொண்டு கையில் கிடைத்ததை வைத்து அடிக்கலாம் ,உதைக்கலாம்.
என்ன நான் சொன்னமாதிரி செய்துபாருங்கள் கண்டிப்பாக உங்களுக்குள்ளே ஒரு மாற்றம் தெரியும்.என் கோபத்திற்கு இதுதான் மருந்து.அதுபோல் உங்களுக்கும் இருக்கவேண்டும் என்று என்னுடைய அவா.

Wednesday, August 23, 2006

நினைத்து பார்க்கவில்லை

உன் கண்கள் என்னை பார்க்கும் பொழுதும்
உன் கைகள் என்னை தொடும் பொழுதும்
உன் இதழ்கள் என்னிடம் பேசும் பொழுதும்
உன் கால்கள் என் பின்னே
வரும் பொழுதும்
நீ சுவாசிக்கும் காற்றை நான் சுவாசிக்கும் பொழுதும்
நான் உனக்காக பிறந்தவள் உனக்காக
என்னை இறைவன் படைத்தான் என்று
நினைத்தேன்
ஆனால்
வேறு பெண்ணுக்காக என்னை தூது
அனுப்ப இந்த செய்கைகள் என்பதை
நினைத்து பார்க்கவில்லை.

பெண்ணே

வறுமையை கொடுமையாக நினைத்து
நீ ஏன் வரதட்சணையை மட்டும்
கொடுமையாக நினைக்கவில்லை
வாழ்க்கை மட்டும் போதும் என்று
நினைத்துவிட்டாயா?

அழகை சொல்வாயாக

வானத்தில் பறந்து செல்லும் பறவைகளே
வானத்தின் அழகை சொல்வாயாக
பூமியில் ஊர்ந்து செல்லும் அஃறிணைகளே
பூமியின் வளத்தை சொல்வயாக
மலையில் இருந்து பாய்ந்து வரும்
தண்ணீரே அதன் செழிப்பை சொல்வயாக
வாழ்க்கையை வாழ்ந்து வரும் மனிதனே
வாழ்வின் நெறிகளை சொல்வாயாக.

Tuesday, August 22, 2006

நரபலி

ஒரு மரம் எதீர்பாத்தது தனக்கு மனிதன் நீர் ஊற்றூவான் என்று
ஒரு காகம் எதிர்பார்க்கும் தனக்கு உணவு வரும் என்று
ஒரு உழவன் எதிர்பார்ப்பான் இன்று மழை வரும் என்று
ஆனால்
எதையும் எதிர்பார்க்காமல் பிறக்கும் குழந்தைக்கு
மனிதன் வைத்திருப்பது நரபலி ஒன்று
இது
பக்தியின் சீற்றத்தால் அல்ல
வெறியின் சீற்றத்தால்.